அஃகம் – தானியம்
அகம் – உள்ளம்
அகங்கை – உள்ளங்களை
அகதி – கதியற்றவன்
அக்கரை – மறுகரை
அக்கறை – ஆர்வம்
அக்கினி – தீ
அச்சம் – பயம்
அஞ்சலி – வணக்கம்
அடி – பாதம்
அடிசில் – உணவு
அடையாளம் – சின்னம்
அணங்கு – தெய்வப்பெண்
அண்மை – சமீபம்
அண்டம் – உலகம்
அண்ணம் – மேல்வாய்
அந்திநேரம் – மாலைநேரம்
அபாயம் – ஆபத்து
அமர் – போர், யுத்தம்
அம்புயம் – தாமரை
அரசன் – மன்னன், கொற்றவன், கோன்
அழகு – எழில், வடிவு
அறம் – தருமம்
அறிஞன் – கற்றோன்
அன்னம் – சோறு
அன்னம் – பறவை
அன்னை – தாய்
ஆசனம் – இருக்கை
ஆசை – விருப்பு
ஆபரணம் – நகை, இழை
ஆணை – கட்டளை, ஏவல்
ஆரணியம் – காடு
ஆற்றல் – சக்தி
இசை – சங்கீதம்
இடுக்கன் – துன்பம்
இன்பம் – சந்தோசம், மகிழ்ச்சி, உவகை
இளைஞன் – வாலிபன்
இரகசியம் – அந்தரங்கம்
இரத்தம் – செந்நீர், சோரி, உதிரம்
இரவு – இராத்திரி, நிசி, கங்குல்
இரை – உணவு
இறப்பு – மரணம், மறைதல்
இறை – வரி, தெய்வம்
இழவு – மரணம்
ஈகை – கொடை
ஈயார் – உலோபி
ஈற்றில் – இறுதியில்
உடல் – உடம்பு
உடு – நட்சத்திரம்
உடை – ஆடை, உடுப்பு
உணவு – ஆகாரம்
உண்மை – சத்தியம், மெய்
உதவி – உபசாரம்
உயிர் – ஆவி
உழவன் – விவசாயி
உறக்கம் – நித்திரை
உறுதி – வலிமை
உற்சாகம் – சுறுசுறுப்பு
ஊடல் – பிரிவு
ஊதியம்- சம்பளம்
ஊழியர் – பணியாள்
ஊர்தி – வாகனம்
எண் – இலக்கம்
எண்ணம் – நினைப்பு
எதிரி – பகைவன்
ஏடு – புத்தகம், நூல்
ஏர் – மேழி, கலப்பை
ஏவல் – கட்டளை
ஏழை – வறியவர்
ஐயம் – சந்தேகம்
ஐக்கியம் – ஒற்றுமை
ஒலி – சத்தம், தொனி
ஒளி – வெளிச்சம், பிரகாசம், சுடர்
ஒழி – நீக்கு, அழி
ஒத்தாசை – உதவி
ஓவியம் – சித்திரம்
கடி – காவல்
கணம் – கூட்டம், வணங்குதல்
கணி – மதிப்பிடல்
கண் – விழி
கரை – ஓரம்
கலி – துன்பம், கடல்
கலை – வித்தை, ஆண்மான்
கவி – குரங்கு, பாடல்
கறை – அழுக்கு, வடு
கனம் – மதித்தல், பாரம்
காடு – வனம், கானகம், அடவி
காற்று – வளி, மாருதம், தென்றல்
கிரி – குன்று
கிலி – பயம்
கிளவி – பதம், சொல்
குசலம் – சுகம்
குழந்தை – சிசு, மகவு, சேய்
கேசம் – கூந்தல், குழல், முடி
கோபம் – சினம், சீற்றம்
கோசம் – முட்டை
சந்தை – அங்காடி
சந்திரன் – நிலா, பிறை, மதி
சரம் – மாலை, அம்பு
சபை – அவை, குழு,
சண்டை – அமர், சமர், யுத்தம்
சிரிப்பு – புன்னகை, முறுவல்
சுனை – நீரூற்று
சுவர்ணம் – தங்கம், பொன்
சென்னி – தலை, சிரசு
சேய்மை – தூரம்
சேவை – தொண்டு, பணி
ஞானம் – அறிவு, விந்தை
தந்தை – அச்சன், அப்பன்
தமர் – உறவினர்
தரு – மரம்
திறை – கப்பம்
திணை – ஒழுக்கம்
தீமை – பிரதிகூலம்
துன்பம் – வேதனை, இடர்
தையல் – பெண்
தோல் – சருமம்
தோள் – புயம்
நல்குரவு – வறுமை
நிழல் – விம்பம்
நீர் – புனல், அப்பு
படி – வேதனம், படித்தல்
பந்தம் – கட்டு, கயிறு
பயிர் – நாற்று
பாம்பு – அரவம், சர்ப்பம், பணி
பாவை – பெண், பொம்மை
புசி – உண், சாப்பிடு
புத்தகம் – நூல், பனுவல், இழை
பொழுது – நேரம், பருவம்
மடல் – கடிதம்
மஞ்சு – அழகு, மேகம்
மலம் – பௌவி
மணம் – வாசனை
மலை – சீர், குன்று, வரை
மாண் – சிறப்பு
மாதர் – பெண்கள்
முடிவு – கடைசி, இறுதி
முறைப்பாடு – விண்ணப்பம்
மொட்டு – அலர்
மொழி – பாஷை
யானை – கயம், வேழம்
யுத்தம் – போர்
வதனம் – முகம்
வயல் – பழனம், புலம்
வரை – கோடு, மூங்கில்
வளை – புற்று
வாஞ்சை – ஆசை
வானம் – விண், விசும்பு, ஆகாயம்
விடியல் – உதயம், புலரி, வைகறை
வீடு – இல்லம், அகம், மனை
வெல்லம் – சர்க்கரை
வேலை – பணி, அலுவல். தொழில்
வைதல் – ஏசுதல்
![]()
