Homeதமிழ் மொழிவளம்ஒத்தக்கருத்துச் சொற்கள்

ஒத்தக்கருத்துச் சொற்கள்

 அஃகம் – தானியம்
 அகம் – உள்ளம்
 அகங்கை – உள்ளங்களை
 அகதி – கதியற்றவன்
 அக்கரை – மறுகரை
 அக்கறை – ஆர்வம்
 அக்கினி – தீ
 அச்சம் – பயம்
 அஞ்சலி – வணக்கம்
 அடி – பாதம்
 அடிசில் – உணவு
 அடையாளம் – சின்னம்
 அணங்கு – தெய்வப்பெண்
 அண்மை – சமீபம்
 அண்டம் – உலகம்
 அண்ணம் – மேல்வாய்
 அந்திநேரம் – மாலைநேரம்
 அபாயம் – ஆபத்து
 அமர் – போர், யுத்தம்
 அம்புயம் – தாமரை
 அரசன் – மன்னன், கொற்றவன், கோன்
 அழகு – எழில், வடிவு
 அறம் – தருமம்
 அறிஞன் – கற்றோன்
 அன்னம் – சோறு
 அன்னம் – பறவை
 அன்னை – தாய்

 ஆசனம் – இருக்கை
 ஆசை – விருப்பு
 ஆபரணம் – நகை, இழை
 ஆணை – கட்டளை, ஏவல்
 ஆரணியம் – காடு
 ஆற்றல் – சக்தி
 இசை – சங்கீதம்
 இடுக்கன் – துன்பம்
 இன்பம் – சந்தோசம், மகிழ்ச்சி, உவகை
 இளைஞன் – வாலிபன்
 இரகசியம் – அந்தரங்கம்
 இரத்தம் – செந்நீர், சோரி, உதிரம்
 இரவு – இராத்திரி, நிசி, கங்குல்
 இரை – உணவு
 இறப்பு – மரணம், மறைதல்
 இறை – வரி, தெய்வம்
 இழவு – மரணம்
 ஈகை – கொடை
 ஈயார் – உலோபி
 ஈற்றில் – இறுதியில்
 உடல் – உடம்பு
 உடு – நட்சத்திரம்
 உடை – ஆடை, உடுப்பு
 உணவு – ஆகாரம்
 உண்மை – சத்தியம், மெய்
 உதவி – உபசாரம்
 உயிர் – ஆவி
 உழவன் – விவசாயி
 உறக்கம் – நித்திரை
 உறுதி – வலிமை
 உற்சாகம் – சுறுசுறுப்பு
 ஊடல் – பிரிவு
 ஊதியம்- சம்பளம்
 ஊழியர் – பணியாள்
 ஊர்தி – வாகனம்
 எண் – இலக்கம்
 எண்ணம் – நினைப்பு
 எதிரி – பகைவன்
 ஏடு – புத்தகம், நூல்
 ஏர் – மேழி, கலப்பை
 ஏவல் – கட்டளை
 ஏழை – வறியவர்
 ஐயம் – சந்தேகம்
 ஐக்கியம் – ஒற்றுமை
 ஒலி – சத்தம், தொனி
 ஒளி – வெளிச்சம், பிரகாசம், சுடர்
 ஒழி – நீக்கு, அழி
 ஒத்தாசை – உதவி
 ஓவியம் – சித்திரம்
 கடி – காவல்
 கணம் – கூட்டம், வணங்குதல்
 கணி – மதிப்பிடல்
 கண் – விழி
 கரை – ஓரம்
 கலி – துன்பம், கடல்
 கலை – வித்தை, ஆண்மான்
 கவி – குரங்கு, பாடல்
 கறை – அழுக்கு, வடு
 கனம் – மதித்தல், பாரம்
 காடு – வனம், கானகம், அடவி
 காற்று – வளி, மாருதம், தென்றல்
 கிரி – குன்று
 கிலி – பயம்
 கிளவி – பதம், சொல்
 குசலம் – சுகம்
 குழந்தை – சிசு, மகவு, சேய்
 கேசம் – கூந்தல், குழல், முடி
 கோபம் – சினம், சீற்றம்
 கோசம் – முட்டை
 சந்தை – அங்காடி
 சந்திரன் – நிலா, பிறை, மதி
 சரம் – மாலை, அம்பு
 சபை – அவை, குழு,
 சண்டை – அமர், சமர், யுத்தம்
 சிரிப்பு – புன்னகை, முறுவல்
 சுனை – நீரூற்று
 சுவர்ணம் – தங்கம், பொன்
 சென்னி – தலை, சிரசு
 சேய்மை – தூரம்
 சேவை – தொண்டு, பணி
 ஞானம் – அறிவு, விந்தை
 தந்தை – அச்சன், அப்பன்
 தமர் – உறவினர்
 தரு – மரம்
 திறை – கப்பம்
 திணை – ஒழுக்கம்
 தீமை – பிரதிகூலம்
 துன்பம் – வேதனை, இடர்
 தையல் – பெண்
 தோல் – சருமம்
 தோள் – புயம்
 நல்குரவு – வறுமை
 நிழல் – விம்பம்
 நீர் – புனல், அப்பு
 படி – வேதனம், படித்தல்
 பந்தம் – கட்டு, கயிறு
 பயிர் – நாற்று
 பாம்பு – அரவம், சர்ப்பம், பணி
 பாவை – பெண், பொம்மை
 புசி – உண், சாப்பிடு
 புத்தகம் – நூல், பனுவல், இழை
 பொழுது – நேரம், பருவம்
 மடல் – கடிதம்
 மஞ்சு – அழகு, மேகம்
 மலம் – பௌவி
 மணம் – வாசனை
 மலை – சீர், குன்று, வரை
 மாண் – சிறப்பு
 மாதர் – பெண்கள்
 முடிவு – கடைசி, இறுதி
 முறைப்பாடு – விண்ணப்பம்
 மொட்டு – அலர்
 மொழி – பாஷை
 யானை – கயம், வேழம்
 யுத்தம் – போர்
 வதனம் – முகம்
 வயல் – பழனம், புலம்
 வரை – கோடு, மூங்கில்
 வளை – புற்று
 வாஞ்சை – ஆசை
 வானம் – விண், விசும்பு, ஆகாயம்
 விடியல் – உதயம், புலரி, வைகறை
 வீடு – இல்லம், அகம், மனை
 வெல்லம் – சர்க்கரை
 வேலை – பணி, அலுவல். தொழில்
 வைதல் – ஏசுதல்

Loading

Share: 

No comments yet! You be the first to comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *