அடி பற்றிய மரபுத் தொடர்கள்
அடிபணிதல் – கீழ்படிதல்
அடிநகர்தல் – இடம்பெயர்தல்
அடியிடுதல் – தன் மரபை புகழ் பெறச் செய்தல்
அடியிடுதல் – ஆரம்பித்தல்
அடியொற்றல் – பின்பற்றுதல்
கண் பற்றிய பரபுத் தொடர்கள்
கண்கலத்தல் – ஒருவரை ஒருவர் விரும்புதல்
கண்ணெறிதல் – கடைக்கண்ணால் பார்த்தல்
கண் திறத்தல் – அறிவுண்டாதல்
கண்மூடுதல் – இறத்தல்
கண் வளர்த்தல் – நித்திரை செய்தல்
கண் வைத்தல் – விருப்பம் கொள்ளுதல்
கழுத்து பற்றிய மரபுத் தொடர்கள்
கழுத்தறுத்தல் – நம்பிக்கை துரொகம் செய்தல்
கழுத்திற்கட்டுதல் – வலிந்து திணித்தல்
கழுத்துக் கொடுத்தல் – பிறர் துன்பத்தில் உதவுதல்
கழுத்தைக் கட்டுதல் – விடால் நெருக்குதல்
காது பற்றிய மரபுத்தொடர்கள்
காதில் ஓதுதல் – கோள் சொல்லுதல்
காது குத்தல் – ஏமாற்றுதல்
காது கொடுத்தல் – அவதானித்தல்
காதைக் கடித்தல் – இரகசியம் கூறல்
கால் பற்றிய மரபுத்தொடர்கள்
கால் ஊன்றுதல் – நிலைபெற்றிருத்தல்
கால் கொள்ளுதல் – ஆரம்பித்தல்
காலைச் சுற்றுதல் – தொடர்ந்து பற்றுதல்
காலாறுதல் – ஓய்ந்திருத்தல்
காலில் விலுதல் – மன்னிப்பு கேட்டல்
கால் பிடித்தல் – தடைப்படல்
கால் பின்னுதல் – தடைப்படல்
வயிறு பற்றிய மரபுத் தொடர்கள்
வயிறு எரிதல் – பொறாமை கொள்ளாமை
வயிறு கிள்ளுதல், வயிறு கடித்தல் – பசியுண்டாகுதல்
வயிறு குளிர்தல் – திருப்தி அடைதல்
வயிற்றிலடத்தில் – சீவனத்தை கெடுத்தல்
வயிற்றை கட்டுதல் – செலவைச் சுருக்குதல்
வயிறு வளர்த்தல் – எவ்வாறோ பிழைத்து கொள்ளுதல்
வாய் பற்றிய மரபுத் தொடர்கள்
வாயில் மண் போடுதல் – கேடு விளைவித்தல்
வாய் திறத்தல் – பேசத் தொடங்குதல்
வாய் புலம்புதல் – பிதற்றுதல்
வாய்ப் பூட்டுப் போடுதல் – பேசாது தடுத்தல்
வாய் விடுதல் – வெளிப்படையாக கேட்டல்
கை பற்றிய மரபுத் தொடர்கள்
கை கலப்பு – சண்டை
கை கழுவுதல் – முற்றாக விலகல்
கை கூடல் – அனுகூலமாதல்
கை கொடுத்தல் – உதவி செய்தல்
கை தளர்தல் – வறுமையாதல்
கை பிசைதல் – செய்வதறியாது திகைத்தல்
கை மிகுதல் – அளவு கடத்தல்
கை நீட்டுதல் – அடித்தல்
கையளித்தல் – ஒப்படைத்தல்
கையிடல் – ஆரம்பித்தல்
செவி பற்றிய மரபுத் தொடர்கள்
செவி கொடுத்தல் – கவனித்து கேட்டல்
செவிக் கேறுதல் – கேட்பதற்கு இனிமையாக இருத்தல்
தலை பற்றிய மரபுத் தொடர்கள்
தலைகாட்டுதல் – வெளிவருதல்
தலை கீழாய் நடத்தல் – முறை தவறி நடத்தல்
தலை கீழாய் நிற்றல் – பிடிவாதம் பிடித்தல்
தலைக்கணம் – தான் என்ற அகந்தை
தலைக் கொழுப்பு – தான் என்ற அகந்தை
தலைப்படுதல் – மேற்கொள்ளுதல்
தலைப் பாரம் – தான் என்ற அகந்தை
தலைமறைவு – ஒளிந்திருத்தல்
தோள் பற்றிய மரபுத் தொடர்கள்
தோள் கொடுத்தல் – உதவி செய்தல்
தோள் மாற்றுதல் – பிறர் சுமையை தான் சுமத்தல்
தோளிலிருந்து செவிகடித்தல் – ஆதரிப்பவரை வஞ்சித்தல்
நா பற்றிய மரபுத்தொடர்கள்
நாக்கடைத்தல் – பேச முடியாது இருத்தல்
நாக்குத்தவறுதல் – பேச்சுறுதி தவறுதல், பொய் சொல்லுல்
நாக்கு நீழுதல் – அடக்கமின்றி பேசுதல்
நாக்குப் புரளுதல் – பேச்சுறுதுp தவறுதல், பொய் சொல்லுதல்
நாக்கு வளைத்தல் – பழித்தல்
நாக்கு விழுதல் – பேச நாவெழாமல் போதல்
பல் பற்றிய மரபுத் தொடர்கள்
பல் இழித்தல் – ஏளனம் செய்தல், பல்லைக் காட்டி கெஞ்சுதல்
பல்லைக்கடிதல் – துன்பம் வருவதை சகித்து கொள்ளல்
பல்லைப் பிடுங்குதல் – சக்தியை அடக்குதல்

FOUNDER DIRECTOR
Agaram Dhines
About Me
Name: Th. Dineshkumar (Agaram Dhines)
Profession: Tamil Language Teacher | YouTuber | Online Tutor
I am a passionate and experienced Tamil language and literature teacher with over 8 years of teaching experience. I currently serve as a Sri Lanka Teacher Service (SLTS II/2) educator, guiding students from Grades 6 to 13.
Academic Qualifications:
- Bachelor of Arts (Hons) in Tamil & Tamil Language Teaching
- Diploma in Artificial Intelligence and Graphic Designing
Professional Highlights:
- I run a popular educational YouTube channel named “Agaram Dhines”, where I create and share free Tamil lessons.
- I teach students not only from Sri Lanka, but also Tamil language enthusiasts from around the world.
- I offer personalized online classes, supporting both school curriculum and Tamil language skill development.
My Services Include:
- Curriculum-based teaching for Grades 6 to 13
- Special focus on literature, grammar, and writing skills
- Model exams, practice question papers, and video-based lessons
- Speaking and writing skill development for non-native Tamil learners
![]()
