இலை பற்றிய மரபுச் சொற்கள்
ஈச்சை – ஓலை
கமுகு – ஓலை
கரும்பு – தோகை
சோளம் – தோகை, தாள்
தாளை – ஓலை
தென்னை – ஓலை
நெல் – தாள்
பலா – இலை
பனை – ஓலை
புள் – தாள்
மா – இலை
முரங்கை – இலை
வாழை – இலை
உள்ளீடு பற்றிய மரபுச் சொற்கள்
அவரை – பருப்பு
உழுந்து – பருப்பு
கற்றாளை – சோறு
துவரை – பருப்பு
தினை – அரிசி
தோடை – சுளை
நெல் – அரிசி
பயறு – பருப்பு
பலா – சுளை
மா – சதை
வாழை – சதை
வரகு – அரிசி
கூட்டத்தைக் குறிக்கும் மரபுச் சொற்கள்
அறிஞர் – அவை
ஆ – நிரை
ஆடு – மந்தை
உடு – திரள்
உயிர் – தொகுதி
எறும்பு – கூட்டம், குவியல்
ஒளி – கற்றை
கல் – குவியல்
கள்வர் – கூட்டம்
காவல் – படை
குண்டர் – கும்பல்,
சுருட்டு – கட்டு
சேனை – திரள்
திறப்பு ஃ பூட்டு – கோர்வை
தீவு – கூட்டம்
தென்னை – தோப்பு
நடிகர் – குழு
நாடகம் – குழு, கோஷ்டி, சபை
நாற்று – பிடி
நூல் – பந்து
நெல் – குவியல்
பல் – வரிசை
பசு – நிரை
பாடகர் – குழு
படைவீரர் – அணி
புகையிலை – சிப்பம்
புத்தகம் – அடுக்கு
புல் – கற்றை
பூ – கொத்து, மஞ்சரி
பூதம் – கணம்
மக்கள் – கூட்டம், தொகுதி
மணி – மாலை
மயில் – குழாம்
மரம் – காடு
மலர் – செண்டு, மாலை
மலை – தொடர்
மாணவர் – குழாம்
மா – சோலை, தோப்பு
மான் – கூட்டம்
முகில் – கூட்டம்
முத்து – குவியல்
யானை – பந்தி
வைக்கோல் – கற்றை
தொகுதி பற்றிய மரபுச் சொற்கள்
ஈச்சை – குலை
சோளம் – கதிர்
திராட்சை – குலை
தென்னை – குலை
நெல் – கதிர்
பனை – குலை
புளி – கொத்து
பூங்கொத்து – மஞ்சரி
மா – கொத்து
முந்திரி – குலை
வாழை – குலை, தாறு
பிஞ்சுப் பற்றிய மரபுச் சொற்கள்
அவரை – பிஞ்சு
கத்தரி – பிஞ்சு
தென்னை – குரும்பை
பனை – நுங்கு, குரும்பை
பலா – மூசு
பூசணி – பிஞ்சு
மா – வடு
மூங்கில் – கன்று
வாழை – கச்சல்
வெண்டி – பிஞ்சு
வித்து பற்றிய மரபுச் சொற்கள்
ஆமணக்கு – முத்து
கத்தரி – விதை
கொய்யா – விதை
சோளம் – மணி
தினை – மணி
நிலக்கடலை – பருப்பு
நெல் – மணி
பப்பாசி – விதை ஃ கொட்டை
பலா – கொட்டை
பாகல் – விதை
பூசணி – விதை
புளி – கொட்டை
மிளகாய் – வித்து
வேம்பு – விதை ஃ கொட்டை
மலம் பற்றிய மரபுச் சொற்கள்
ஒட்டகம் – இலத்தி, இலண்டம்
ஆடு – பிழுக்கை
கழுதை- விட்டை
காகம் – எச்சம்
குதிரை – இலத்தி, இலண்டம்
குருவி – எச்சம்
மாடு – சாணம்
யானை – இலத்தி, இலண்டம்
பிற மரபுச் சொற்கள்
ஆடு மேய்ப்பவன் – ஆயன், இடையன்
கப்பல் செலுத்துபவன் – மாலுமி, மீகாமன்
தேர் செலுத்துபவன் – பாகன்
மாடு மேய்ப்பவன் – இடையன்
யானை செலுத்துபவன் – பாகன்
விமானம் செலுத்துபவன் – வலவன்
விலங்கு பற்றிய இளமை மரபு
அணில் – பிள்ளை, குஞ்சு
ஆடு – குட்டி
எலி – குஞ்சு, குட்டி
எருமை – கன்று
கரடி – குட்டி
கழுதை – குட்டி
கிளி – பிள்ளை, குஞ்சு
கீரி – பிள்ளை
குரங்கு – குட்டி, பறள்
குருவி – குஞ்சு
கோழி – குஞ்சு
சிங்கம் – குட்டி, குருளை
தவளை – குஞ்சு, பேத்தை
நாய் – குட்டி, குருளை
பன்றி – குட்டி
புலி – குட்டி, பறழ்
பூனை – குட்டி, பறள்
மான் – கன்று, குட்டி
யானை – போதகம், குட்டி
ஆண் பெண் மரபுச் சொற்கள்
பிராணி ஆண் பெண்
ஆடு கடா மறி
கரடி ஒருத்தல் பெட்டை
குதிரை குண்டு பெட்டை, வடவை
குரங்கு கடுவன் மந்தி
சிங்கம் ஏறு பெட்டை
கோழி சேவல் பேடு, பெட்டை
நரி ஓரி பாட்டி
பன்றி ஒருத்தல் பிணை
புலி போத்து பிணை
பூனை கடுவன் பெட்டை
மரை ஒருத்தல் பெட்டை
மயில் போத்து அளகு
மாடு காளை, ஏறு பசு, நகு
மான் கலை பிணை
நண்டு அலவன் பெடை
நாய் கடுவன் பெட்டை
யானை களிறு பிடி
விலங்கு மற்றும் பறவைகளின் ஒலி மரபுச் சொற்கள்
ஆடு – கத்தும்
ஆந்தை – அலறும்
எருது – எக்காளமிடும்
எலி – கீச்சிடும்
கழுதை – கத்தும்
காகம் – கரையும்
கிளி – பேசும், கொஞ்சும், மிழற்றும்
குதிரை – கனைக்கும்
குரங்கு – அலப்பும்
குருவி – கீச்சிடும்
குயில் – கூவும்
கோழி – கொக்கரிக்கும்
சிங்கம் – கர்ச்சிக்கும், முழங்கும்
சேவல் – கூவும்
தவளை – கத்தும்
தேவாங்கு – அழும்
தேனீ – ரீங்காரம் செய்யும்
நரி – ஊளையிடும்
நாய் – குரைக்கும்
புலி – உறுமும்
பசு – கதறும்
பல்லி – சொல்லும்
பன்றி – உறுமும்
புறா – குறுகுறுக்கும், குனுகும்
பூனை – சீறும்
மயில் – அகவும்
யானை – பிளிரும்
வண்டு – முரலும், இரையும்
வாத்து – கத்தும்
வானம்பாடி – பாடும்
வினை மரபுச் சொற்கள்
அப்பம் – தின்
ஆடை – நெய்
ஆபரணம் – அணி
இறை – வழிபடு
களை – பறி
சுவர் – எழுப்பு
சோறு – உண், சாப்பிடு
தண்ணீர் – குடி
பழம் – தின்
பாட்டு – பாடு
பாய் – விரி
பூ – பறி
மரம் – வெட்டு
மலர் – கொய்
மாத்திரை – விழுங்கு
நீர் – பாய்ச்சு
நெல் – தூற்று
இருப்பிடம் பற்றிய மரபுச் சொற்கள்
ஆடு – பட்டி
எலி – வளை
கரையான் – புற்று
கிளி – கூடு, பொந்து
குதிரை – கொட்டில், லயம்
குருவி – கூடு
கோழி – பண்ணை
சிங்கம் – குகை
சிலந்தி – வலை
நண்டு – வளை
நாய் – கூடு
பாம்பு – புற்று
மனிதன் – வீடு, இல்லம்
மாடு – தொழுவம்
தாவர உறுப்பு மரபு சொற்கள்
ஆவரம் – குழை
கப்பம் – தட்டு
கீரை – தண்டு
சோளம் – தட்டு
தாழை – மடல்
தென்னை – கீற்று
நெல் – தாள்
முருங்கை – கீரை
வாழை – தண்டு
வேப்பம் – தழை

FOUNDER DIRECTOR
Agaram Dhines
About Me
Name: Th. Dineshkumar (Agaram Dhines)
Profession: Tamil Language Teacher | YouTuber | Online Tutor
I am a passionate and experienced Tamil language and literature teacher with over 8 years of teaching experience. I currently serve as a Sri Lanka Teacher Service (SLTS II/2) educator, guiding students from Grades 6 to 13.
Academic Qualifications:
- Bachelor of Arts (Hons) in Tamil & Tamil Language Teaching
- Diploma in Artificial Intelligence and Graphic Designing
Professional Highlights:
- I run a popular educational YouTube channel named “Agaram Dhines”, where I create and share free Tamil lessons.
- I teach students not only from Sri Lanka, but also Tamil language enthusiasts from around the world.
- I offer personalized online classes, supporting both school curriculum and Tamil language skill development.
My Services Include:
- Curriculum-based teaching for Grades 6 to 13
- Special focus on literature, grammar, and writing skills
- Model exams, practice question papers, and video-based lessons
- Speaking and writing skill development for non-native Tamil learners
![]()
