Homeதமிழ் மொழிவளம்ஒரு பொருள் – பல சொற்கள் (ஒரு பொருளுடைய பல சொற்கள்)

ஒரு பொருள் – பல சொற்கள் (ஒரு பொருளுடைய பல சொற்கள்)

திரிசொல் இரண்டு வகைப்படும் ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியுமு;, பல பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் வரும். இதில் ஒரு சொல் குறித்த பல பொருள்
 அகிம்சை – இன்னல் செய்யாமை, துன்புறுத்தாமை
 அடி – கால், தாள், பாதம்
 அபாயம் – ஆபத்து, இடர், இடையூறு
 அந்திப் பொழுது – சாயங்காலம், சாய்பொழுது, செக்கல், மாலை
 அரசன் – கோ, புரவலன், கோன், வேந்தன், மன்னன்
 அழகு – எழில், வடிவு, சிங்காரம், வண்ணம், சுந்தரம், வனப்பு, நிறம்
 அறிவு – ஞானம், புத்தி மதி விவேகம், உணர்வு
 அறிவாளி – அறிஞன், கற்றோன், சான்றோன், படித்தோன்,
 அறிவுரை – நல்லுரை, உபதேசம், புத்திமதி
 ஆற்றல் – உரம், சக்தி, திண்மை, வலிமை
 அன்பு – இரக்கம், பரிவு, நேசம், பிரியம்
 ஆசிரியர் – ஆசான், உபாத்தியன், குரவர், தேசிகர்
 ஆதி – ஆரம்பம், தொடக்கம், முடக்கம்
 ஆபரணம் – அணி, அணிகலன், இழை, நகை
 இரவு – இராத்திரி, இருட்டு, நிசி, கங்குல்
 இனம் – உறவு, ஒக்கல், கிளை, சுற்றம், பரிசனம்
 இன்பம் – உவகை, களிப்பு, சந்தோசம், மகிழ்ச்சி
 உடல் – உடம்பு, சரீரம், மெய், மேனி
 உணவு – அடிசில், ஆகாரம், உண்டி, ஊண்
 உண்மை – சத்தியம், மெய், வாய்மை
 உதயம் – காலைப்பொழுது, தோற்றம், புலவர், விடியல், வைகறை
 உதிரம் – இரத்தம், குரதி, செந்நீர்
 உலகம் – ஞாலம், தரணி, பார், பூமி, புவனம், வையகம்
 ஊதியம் – சேவை, தொண்டு, பணி, வேலை
 ஊழியம் – ஆதாயம், இலாபம், கூலி, சம்பளம்
 ஒலி – அரவம், ஓசை, சத்தம், தொனி
 ஒளி – கதிர், சுடர், பிரகாசம்,
 கணவன் – கொழுநன், தலைவன், பதி, நாயகன்
 கண் – நயனம், நேத்திரம், விழி
 கல்வி – வித்தை, கலை, படிப்பு
 காடு – அடவி, ஆரணியம், கானகம், வனம்
 காற்று – ஊதை, தென்றல், பவனம், மாருதம், வளி
 குடித்தல் – அருந்தல், சுவைத்தல், பருகுதல்
 குதிரை – அசுவம், அயம், துரகம், பரி, புரவி
 குழந்தை – குழவி, சிசு, சேய், பிள்ளை, மகவு, மழலை
 குளம் – தடாகம், பொய்கை, வாவி
 குற்றம் – களங்கம், காடு, தப்பு, தவறு, பிழை, மாசு
 கேடு – அழிவு, சிதைவு, சேதம், நாசம்
 சண்டை – அமர், சமர், போர், யுத்தம்
 சத்தியம் – ஆணை, உண்மை, சபதம், சூழ், பிரமாணம்
 சந்திரன் – அம்புலி, திங்கள், நிலவு, பிறை, மதி, வான்மதி
 சந்தோசம் ஆனந்தம், இன்பம், உவகை, களிப்பு, குனகலம், மகிழ்ச்சி
 சிங்கம் – அரி, ஆழி, சீயம், கேசரி, கோளரி
 சிரிப்பு – நகைப்பு, புன்னகை, முறுவல்
 சினம் – காய்தல், கோபம், சீற்றம், முனிதல், வெகுளி,
 சூரியன் – அருக்கன், ஆதவன், கதிரோன், ஞாயிறு பரிதி, வெய்யோன்
 சொல் – கிழவி, கூற்று, மொழி, வாக்கு
 சோலை – உபவனம், கா, தண்டலை, நந்தவனம், பூங்கா, பொழில்
 சோறு – அடிசில், அமுது, அன்னம், சாதம்
 ஞானம் – அறிவு, ஆற்றல், புத்தி, வித்தை, விவேகம்
 தடாகம் – ஏரி, கயம், குளம், பொய்கை, வாவி
 தரித்தல் – அணிதல், அலங்கரித்தல், சூடுதல், புனைதல்
 தாமரை – அம்புயம், கமலம், சரோகம், மரை, முளரி,
 துன்பம் – அல்லல்;, இடர், இடும்பை, இன்னல், கவலை, துயர், பீடை
 தேன் – கள், தேறல், நறவு, மது
 தொண்டு – ஊழியம், சேவை, பணி
 தொழில் – ஊழியம், பணி, வேலை
 நட்டம் – அழிவு, கேடு, சேதம்
 நித்திரை – அனந்தல், உறக்கம், சயனம், ,துஞ்சல், துயில்
 நீதி – தர்மம், நடு, நியாயம், நெறி
 நீர் – அப்பு, சலம், தண்ணீர், தீர்த்தம், புனல்
 நூல் – ஏடு, பனுவல், புத்தகம், பொத்தகம்
 நெருப்பு – அக்கினி, அழல், அனல், கனல், தழல், தீ
 பகைவன் – எதிரி, விரோதி
 பணிவு – கீழ்படிவு, தாழ்வு
 பறவை – பட்சி, புள்
 பாட்டு – கவி, கவிதை, கீதம், செய்யுள், பா, பாடல்
 பெண் – காரிகை, நங்கை, பாவை, மங்கை, மாது, யுவதி
 பூ – புஷ்பம், மலர்
 பூமி – அகிலம், உலம், தரணி, பார், புவி, வையகம்
 மனைவி – இல்லாள், கிழத்தி, தலைவி, மனையாள்
 முதல் – ஆதி, ஆரம்பம், தொடக்கம்
 மேகம் – கார், கொண்டல், முகில்;
 வண்டு – அறி, கரும்பு, மதுரகம்
 வண்ணம் – சாயல், நிறம், வர்ணம்
 வயல் – கழனி, செய், பழனம், புலனம்
 வாசனை – சுகந்தம், நாற்றம், மணம், விரை
 வானம் – அண்டம், ஆகாயம், விசும்பு, விண், விண்ணகம்
 விடை – உத்தரவு, பதில், மறுமொழி
 விண்ணப்பம் – மனு, முறையீடு, வேண்டுகோள்
 விருப்பம் – அவா, ஆசை, பற்று, வேட்கை
 வீடு – அகம், இல்லம், உறையுள், மனை

ஒரு சொல் – பல பொருள் (ஒரு சொல்லுக்குப் பல பொருள்)


 அகம் – இடம், மனம், மனை
 அடி – அளவு, காலடி, செய்யுள், தாக்கு
 அணங்கு – அழகு, துன்பம், தெய்வப் பெண், துன்பம்
 அண்ணல் – தலைவன், பெருமை
 அணி – அழகு, ஆபரணம், ஒழுங்கு, படை, வகுப்பு
 அமர் – இரு, உக்கிரம், போர், மதில்
 அரவம் – ஒலி, சிலம்பு, பாம்பு
 அரி – அழகு, சிங்கம், விஷ்ணு, வெட்டு
 அளி – அன்பு, கொடு, மது, வண்டு
 அளை – குகை, தயிர், துழாவு, புற்று
 அறை – அடி, சொல், திரை, வீட்டின் பகுதி
 ஆசு – குற்றம், சிறுமை, மெய், விரைவு
 ஆடி – கண்ணாடி, தமிழ் மாதம், அசைந்து
 ஆடு – ஆடுதல், ஒருவகை விலங்கு
 ஆணை – ஏவல், கட்டளை, மெய்
 ஆதி – கடவுள், தொடக்கம், முதல்
 ஆரம் – சந்தனம், மாலை
 ஆலம் – அம்புக் கூடு, ஆலமரம், கடல்,
 ஆழி – கடல், சக்கரம், மோதிரம், வட்டம்
 ஆறு – இளைப்பாறல், ஓரிலக்கம், நதி, வழி
 ஆற்றல் – திறமை, வல்லமை
 இடை – இடம், இடுப்பு, காலம், துன்பம், நடு, வழி
 இரை – உணவு, சத்தமிடு
 இழை – ஆபரணம், இழைத்தல், பஞ்சுநூல்
 இறை – இறைத்தல், கடவுள், வரி
 ஈ – அழிவு, இரத்தல், பறவை, கொடு
 உடு – அம்பு, அகழி, உடுத்தல், நட்சத்திரம்
 உடை – ஆடை, உடைத்தல்,
 உரம் – எரு, ஞானம், மதில், வலிமை
 உரை – சொல், தேய்
 ஊதை – ஊதகருவி, குளிர்க்காற்று, பருத்தல்
 ஏறு – ஆண் சிங்கம், காளை, மேலே செல்
 ஏற்றம் – உயர்வு, நீர் இறைக்கும் கருவி
 ஐயம் – சந்தேகம், பிச்சை
 ஒளி – வெளிச்சம், மறை
 கடி – காப்பு, காவல், கூர்மை, விரைவு
 கட்டு – அரண், கட்டுதல், திருமணம், பந்தம்
 கண்டம் – ஆபரணம், கப்பல், பாத்திரம்
 கரி – விறகு ஏரிப்பதால் வருவது, யானை
 கலம் – ஆபரணம், கப்பல், பாத்திரம்
 கலை – ஆண்மான், கல்வி, கலைத்தல்
 கலி – அம்பு, ஒலி, கடல், துன்பம், போர், வஞ்சகம்
 கவி – சூரியன், பாட்டு, புலவன்
 களி – உணவு, செருக்கு, களிப்பு, மயக்கம்
 களை – பயிருக்கு கேடான புல், நீக்கு
 கவி – கவிஞர், குரங்கு, பாடல்
 காயம் – உடல், புண், பெருங்காயம், நிலைபேறு
 கார் – கருமை, மேகம்
 கானம் – காடு, கீதம், வானம்பாடி
 குடி – குடித்தல், குடியானவன், குடும்பம், வீடு
 குடை – கைக்குடை, தோண்டு
 கூடு – உடம்பு, சேர், பறவைக் கூடு
 கோ – அரசன், பசு
 கோள் – கிரகம், புறம் கூறுதல்
 சங்கம் – கூட்டம், சங்கு
 சுரம் – வழி, வெப்பம்
 சேனை – கிழங்கு தானை, படை
 தாமரை – தாவுகின்ற ஒரு வகை மான், பூ
 தாள் – காகிதம், பாதம், முயற்சி
 திங்கள் – சந்திரன், மாதம், வாரநாள்
 திரி – அலை, விளக்குத் திரி
 துணி – ஆடை, துணிந்து செய்
 தை – தைத்தல், பெண்
 நகை – ஆபரணம், இகழ்ச்சி, ஒளி, சிரிப்பு
 நாடு – தேசம், விரும்பு
 நாண் – கயிறு, வட்டத்தில் நடுவில் வரையும் கோடு, வெட்கம்
 நிரை – ஒழுங்கு, பசுக்கூட்டம், படை வகுப்பு
 படி – படிக்கல், படித்தல், பூமி, மாடிப்படி
 படை – ஆயுதம், தானை
 பணி – அணிகலன், பணிவு, தொழில்
 பதி – அரசன், இறைவன், கணவன், வீடு
 பள்ளி – அறச்சாலை, படுக்கை, பாடசாலை, நித்திரை
 பாடு – ஓசை, பக்கம், பாடுதல், துன்பம்
 பார் – உலகம், கற்பாறை, பார்த்தல், பிரிக்கப்பட்ட விவசாய நிலம்
 மதி – அறிவு, அளவீடு, சந்திரன், மதித்தல், மாதம்
 மறை – இரகசியம், மறைத்தல், வேதம்
 மாடு – இடம், எருது, செல்வம், பக்கம், பொன்
 முடி – தலை மயிர், மகுடம், முடித்தல்
 மெய் – உடம்பு, உண்மை
 வண்ணம் – அழகு, நிறம்
 வளை – சங்கு, புற்று, வளைதல்
 வாரணம் – கடல், கோழி, சங்கு, யானை
 விடை – பதில், காளை
 வேழம் – கரும்பு, நாணல், யானை

FOUNDER DIRECTOR

Agaram Dhines

About Me

Name: Th. Dineshkumar (Agaram Dhines)
Profession: Tamil Language Teacher | YouTuber | Online Tutor

I am a passionate and experienced Tamil language and literature teacher with over 8 years of teaching experience. I currently serve as a Sri Lanka Teacher Service (SLTS II/2) educator, guiding students from Grades 6 to 13.

Academic Qualifications:

  • Bachelor of Arts (Hons) in Tamil & Tamil Language Teaching
  • Diploma in Artificial Intelligence and Graphic Designing

Professional Highlights:

  • I run a popular educational YouTube channel named “Agaram Dhines”, where I create and share free Tamil lessons.
  • I teach students not only from Sri Lanka, but also Tamil language enthusiasts from around the world.
  • I offer personalized online classes, supporting both school curriculum and Tamil language skill development.

My Services Include:

  • Curriculum-based teaching for Grades 6 to 13
  • Special focus on literature, grammar, and writing skills
  • Model exams, practice question papers, and video-based lessons
  • Speaking and writing skill development for non-native Tamil learners

Loading

Share: 

Comments

  • January 30, 2026

    முயற்சித்தேன், அது மிகவும் அருமையாக இருக்கிறது! மென்மையான அனுபவம் மற்றும் வழிசெலுத்துவது எளிது. இதுவரை எனக்கு இது பிடித்திருக்கிறது. இங்கே பாருங்கள்:

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *