Homeதமிழ் மொழிவளம்மரபுச் சொற்கள்

மரபுச் சொற்கள்

இலை பற்றிய மரபுச் சொற்கள்
 ஈச்சை – ஓலை
 கமுகு – ஓலை
 கரும்பு – தோகை
 சோளம் – தோகை, தாள்
 தாளை – ஓலை
 தென்னை – ஓலை
 நெல் – தாள்
 பலா – இலை
 பனை – ஓலை
 புள் – தாள்
 மா – இலை
 முரங்கை – இலை
 வாழை – இலை

உள்ளீடு பற்றிய மரபுச் சொற்கள்
 அவரை – பருப்பு
 உழுந்து – பருப்பு
 கற்றாளை – சோறு
 துவரை – பருப்பு
 தினை – அரிசி
 தோடை – சுளை
 நெல் – அரிசி
 பயறு – பருப்பு
 பலா – சுளை
 மா – சதை
 வாழை – சதை
 வரகு – அரிசி

கூட்டத்தைக் குறிக்கும் மரபுச் சொற்கள்
 அறிஞர் – அவை
 ஆ – நிரை
 ஆடு – மந்தை
 உடு – திரள்
 உயிர் – தொகுதி
 எறும்பு – கூட்டம், குவியல்
 ஒளி – கற்றை
 கல் – குவியல்
 கள்வர் – கூட்டம்
 காவல் – படை
 குண்டர் – கும்பல்,
 சுருட்டு – கட்டு
 சேனை – திரள்
 திறப்பு ஃ பூட்டு – கோர்வை
 தீவு – கூட்டம்
 தென்னை – தோப்பு
 நடிகர் – குழு
 நாடகம் – குழு, கோஷ்டி, சபை
 நாற்று – பிடி
 நூல் – பந்து
 நெல் – குவியல்
 பல் – வரிசை
 பசு – நிரை
 பாடகர் – குழு
 படைவீரர் – அணி
 புகையிலை – சிப்பம்
 புத்தகம் – அடுக்கு
 புல் – கற்றை
 பூ – கொத்து, மஞ்சரி
 பூதம் – கணம்
 மக்கள் – கூட்டம், தொகுதி
 மணி – மாலை
 மயில் – குழாம்
 மரம் – காடு
 மலர் – செண்டு, மாலை
 மலை – தொடர்
 மாணவர் – குழாம்
 மா – சோலை, தோப்பு
 மான் – கூட்டம்
 முகில் – கூட்டம்
 முத்து – குவியல்
 யானை – பந்தி
 வைக்கோல் – கற்றை

தொகுதி பற்றிய மரபுச் சொற்கள்
 ஈச்சை – குலை
 சோளம் – கதிர்
 திராட்சை – குலை
 தென்னை – குலை
 நெல் – கதிர்
 பனை – குலை
 புளி – கொத்து
 பூங்கொத்து – மஞ்சரி
 மா – கொத்து
 முந்திரி – குலை
 வாழை – குலை, தாறு

பிஞ்சுப் பற்றிய மரபுச் சொற்கள்
 அவரை – பிஞ்சு
 கத்தரி – பிஞ்சு
 தென்னை – குரும்பை
 பனை – நுங்கு, குரும்பை
 பலா – மூசு
 பூசணி – பிஞ்சு
 மா – வடு
 மூங்கில் – கன்று
 வாழை – கச்சல்
 வெண்டி – பிஞ்சு

வித்து பற்றிய மரபுச் சொற்கள்
 ஆமணக்கு – முத்து
 கத்தரி – விதை
 கொய்யா – விதை
 சோளம் – மணி
 தினை – மணி
 நிலக்கடலை – பருப்பு
 நெல் – மணி
 பப்பாசி – விதை ஃ கொட்டை
 பலா – கொட்டை
 பாகல் – விதை
 பூசணி – விதை
 புளி – கொட்டை
 மிளகாய் – வித்து
 வேம்பு – விதை ஃ கொட்டை

மலம் பற்றிய மரபுச் சொற்கள்
 ஒட்டகம் – இலத்தி, இலண்டம்
 ஆடு – பிழுக்கை
 கழுதை- விட்டை
 காகம் – எச்சம்
 குதிரை – இலத்தி, இலண்டம்
 குருவி – எச்சம்
 மாடு – சாணம்
 யானை – இலத்தி, இலண்டம்

பிற மரபுச் சொற்கள்
 ஆடு மேய்ப்பவன் – ஆயன், இடையன்
 கப்பல் செலுத்துபவன் – மாலுமி, மீகாமன்
 தேர் செலுத்துபவன் – பாகன்
 மாடு மேய்ப்பவன் – இடையன்
 யானை செலுத்துபவன் – பாகன்
 விமானம் செலுத்துபவன் – வலவன்

விலங்கு பற்றிய இளமை மரபு
 அணில் – பிள்ளை, குஞ்சு
 ஆடு – குட்டி
 எலி – குஞ்சு, குட்டி
 எருமை – கன்று
 கரடி – குட்டி
 கழுதை – குட்டி
 கிளி – பிள்ளை, குஞ்சு
 கீரி – பிள்ளை
 குரங்கு – குட்டி, பறள்
 குருவி – குஞ்சு
 கோழி – குஞ்சு
 சிங்கம் – குட்டி, குருளை
 தவளை – குஞ்சு, பேத்தை
 நாய் – குட்டி, குருளை
 பன்றி – குட்டி
 புலி – குட்டி, பறழ்
 பூனை – குட்டி, பறள்
 மான் – கன்று, குட்டி
 யானை – போதகம், குட்டி

ஆண் பெண் மரபுச் சொற்கள்
 பிராணி ஆண் பெண்
 ஆடு கடா மறி
 கரடி ஒருத்தல் பெட்டை
 குதிரை குண்டு பெட்டை, வடவை
 குரங்கு கடுவன் மந்தி
 சிங்கம் ஏறு பெட்டை
 கோழி சேவல் பேடு, பெட்டை
 நரி ஓரி பாட்டி
 பன்றி ஒருத்தல் பிணை
 புலி போத்து பிணை
 பூனை கடுவன் பெட்டை
 மரை ஒருத்தல் பெட்டை
 மயில் போத்து அளகு
 மாடு காளை, ஏறு பசு, நகு
 மான் கலை பிணை
 நண்டு அலவன் பெடை
 நாய் கடுவன் பெட்டை
 யானை களிறு பிடி

விலங்கு மற்றும் பறவைகளின் ஒலி மரபுச் சொற்கள்
 ஆடு – கத்தும்
 ஆந்தை – அலறும்
 எருது – எக்காளமிடும்
 எலி – கீச்சிடும்
 கழுதை – கத்தும்
 காகம் – கரையும்
 கிளி – பேசும், கொஞ்சும், மிழற்றும்
 குதிரை – கனைக்கும்
 குரங்கு – அலப்பும்
 குருவி – கீச்சிடும்
 குயில் – கூவும்
 கோழி – கொக்கரிக்கும்
 சிங்கம் – கர்ச்சிக்கும், முழங்கும்
 சேவல் – கூவும்
 தவளை – கத்தும்
 தேவாங்கு – அழும்
 தேனீ – ரீங்காரம் செய்யும்
 நரி – ஊளையிடும்
 நாய் – குரைக்கும்
 புலி – உறுமும்
 பசு – கதறும்
 பல்லி – சொல்லும்
 பன்றி – உறுமும்
 புறா – குறுகுறுக்கும், குனுகும்
 பூனை – சீறும்
 மயில் – அகவும்
 யானை – பிளிரும்
 வண்டு – முரலும், இரையும்
 வாத்து – கத்தும்
 வானம்பாடி – பாடும்

வினை மரபுச் சொற்கள்
 அப்பம் – தின்
 ஆடை – நெய்
 ஆபரணம் – அணி
 இறை – வழிபடு
 களை – பறி
 சுவர் – எழுப்பு
 சோறு – உண், சாப்பிடு
 தண்ணீர் – குடி
 பழம் – தின்
 பாட்டு – பாடு
 பாய் – விரி
 பூ – பறி
 மரம் – வெட்டு
 மலர் – கொய்
 மாத்திரை – விழுங்கு
 நீர் – பாய்ச்சு
 நெல் – தூற்று

இருப்பிடம் பற்றிய மரபுச் சொற்கள்
 ஆடு – பட்டி
 எலி – வளை
 கரையான் – புற்று
 கிளி – கூடு, பொந்து
 குதிரை – கொட்டில், லயம்
 குருவி – கூடு
 கோழி – பண்ணை
 சிங்கம் – குகை
 சிலந்தி – வலை
 நண்டு – வளை
 நாய் – கூடு
 பாம்பு – புற்று
 மனிதன் – வீடு, இல்லம்
 மாடு – தொழுவம்

தாவர உறுப்பு மரபு சொற்கள்
 ஆவரம் – குழை
 கப்பம் – தட்டு
 கீரை – தண்டு
 சோளம் – தட்டு
 தாழை – மடல்
 தென்னை – கீற்று
 நெல் – தாள்
 முருங்கை – கீரை
 வாழை – தண்டு
 வேப்பம் – தழை

FOUNDER DIRECTOR

Agaram Dhines

About Me

Name: Th. Dineshkumar (Agaram Dhines)
Profession: Tamil Language Teacher | YouTuber | Online Tutor

I am a passionate and experienced Tamil language and literature teacher with over 8 years of teaching experience. I currently serve as a Sri Lanka Teacher Service (SLTS II/2) educator, guiding students from Grades 6 to 13.

Academic Qualifications:

  • Bachelor of Arts (Hons) in Tamil & Tamil Language Teaching
  • Diploma in Artificial Intelligence and Graphic Designing

Professional Highlights:

  • I run a popular educational YouTube channel named “Agaram Dhines”, where I create and share free Tamil lessons.
  • I teach students not only from Sri Lanka, but also Tamil language enthusiasts from around the world.
  • I offer personalized online classes, supporting both school curriculum and Tamil language skill development.

My Services Include:

  • Curriculum-based teaching for Grades 6 to 13
  • Special focus on literature, grammar, and writing skills
  • Model exams, practice question papers, and video-based lessons
  • Speaking and writing skill development for non-native Tamil learners

Loading

Share: 

No comments yet! You be the first to comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *