ஒருவன் – இறைவன்
இருசுடர் – சந்திரன், சூரியன்
இருதிணை – உயர்திணை, அஃறிணை
இருபொருள் – கல்வி, செல்வம்
இருமுதுகுரவர் – தாய்;, தந்தை
இருமை – இம்மை, மருமை
இருவகை அறம் – இல்லறம், துறவறம்
இருவினை – நல்வினை, தீவினை
முக்கடுகு – சுக்கு, மிளகு, திப்பலி
முக்கரணம் – மனம், வாக்கு, காயம்
முக்கனி – மா, பலா, வாழை
முக்காலம் – இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
முக்குணம் – சாத்துவிகம், இராசதம், தாமதம்
முக்குற்றம் – காமம், வெகுளி, மயக்கம்
முச்சுடர் – சந்திரன், சூரியன், அக்கினி
முத்தொழில் – ஆக்கல் அழித்தல், படைத்தல்
முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர்
மும்மூர்த்திகள் – சிவன், விஷ்னு, பிரம்மா
மூவிடம் – தன்மை, முன்னிலை, படர்க்கை
மூவேந்தர் – சேர, சோழ, பாண்டியர்கள்
நால்வர் – அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்
நால் முனிவர் – சனகர், சனந்தனர், சனாதரர், சனற்;குமாரர்
நால் வகை உண்டி – உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன
நால் வகை பொன் – ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம்
நாற் கவி – ஆசு, மதுரம், சித்திரம். வித்தாரம்
நாற்குணம் – அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடிப்பு (ஆண்)
நாற்குணம் – அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு (பெண்)
நாற்சொல் – பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
நாற்படை – தேர்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாற்படை
நாற்பாதம் – சரியை, கிரியை, யோகம், ஞானம்
நாற்பயன் – அறம், பொருள், இன்பம், வீடு
நான்கு உபாயம் – சாம, பேத, தான, தண்டம்
ஐங்குரவர் – அரசன், ஆசிரியர், தாய், தந்தை, தமையன்
ஐந்திலக்கணம்; – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
ஐம்புலன் – சுவை, ஊறு, ஒளி, ஓசை, நாற்றம்
ஐம்பூதம் – நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்
ஐம்பெரும் காப்பியங்கள் – சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி
ஐம்பெரும் தந்தையர் – பிறப்பித்தோன், கற்பித்தோன், மணமுடித்தோன், அன்னம் தந்தோன், ஆபத்துக்குதவினோன்
ஐம்பெரும் குழு – அரசர், அமைச்சர், புரொகிதர், ஒற்றர், தூதுவர்
ஐம்பொறி – மெய், வாய், கண், மூக்கு, செவி
ஐம்பொன் – பொன், வெள்ளி, செப்பு, இரும்பு, ஈயம்
பஞ்சகவ்வியம் – கோசலம், கோமயம், பால், தயிர், நெய்
பஞ்சமா பாதகங்கள் – கொலை, களவு, கள், பொய், குருநிந்தை,
அறுசுவை – கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு
ஆறறிவு – பார்வை, கேள்வி, நுகர்தல், சுவைத்தல், தொடுதல், பகுத்தல்
ஆறுவகைச் சமயம் – சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்தியம், கௌமாரம்
எழுபிறப்பு – தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்
ஏழு கன்னியர் – அபிராமி, இந்திராணி, கௌமாரி, காளி, நாராயணி, மகேஸ்வரி, வராகி
ஏழு சுரங்கள் – ஸ ரி க ம ப த நி
ஏழு பருவம் – பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரவை, தெரிவை, பேரிளம் பெண்
அட்ட ஐஸ்வரியம் – அரசாங்கம், மக்கள், சுற்றம், பொன், மணி, நெல், வாகனம், அடிமை
எட்டு சித்தி – அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம்
நவதானியம் – உழுந்து, எள், கடலை, கொள்ளு, சாமை, தினை, துவரை, நெல், பயறு
நவரசம் – நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சாந்தம்
நவரத்தினம் – மரகதம், பவளம், நீலம், வச்சிரம், பதுமராகம், முத்து, கோமேதகம், புருடராகம், வைடூரியம்
பத்து அவதாரம் – மீன், ஆமை, பன்றி, நரசிங்கம், வாமனன், பரசுராமன், இராமன், கிருஷ்ணன், பலதேவன், கல்கி
![]()
