Homeதமிழ் மொழிவளம்தமிழில் தவறுகளை தவிர்ப்போம்.

தமிழில் தவறுகளை தவிர்ப்போம்.

வாக்கிய முடிப்பு – இலக்கண வழு – தமிழில் தவறுகளை தவிர்ப்போம்.

  • எழுவாய் ஒருமையாக இருந்தால், பயனிலையும் ஒருமையாக அமைய வேண்டும்.
    உதாரணம்
    • உழவன் நிலத்தை உழுகிறான்.
    • மாடு தோட்டத்தில் மேய்கிறது.
    • மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியரும் சிரமதானத்தில் ஈடுபட்டார்.
    • உழைக்கும் கரங்கள் உன்னதமானவை என்ற உண்மை உணரப்படவேண்டியது.
    • தொண்ணூறு வயது ஆகிவிட்ட எனது தாத்தாவால் இப்போது வேகமாக நடக்கவும் புத்தகம் வாசிக்கவும் விடயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் முடிகின்றது.
    • வினை நிகழாமையை உணர்த்தும் வினை எதிர்மறை வினை என சுட்டப்பெறும்.
    • அதிபர், ஆசிரியர் மாணவர்களோடு சிரமதாப்பணியில் தானும் ஈடுபட்டார்.

  • எழுவாய் பன்மையாக இருந்தால், பயனிலையும் பன்மையாக அமைய வேண்டும்.
    • உழவர்கள் நிலத்தை உழுகின்றனர்.
    • மாடுகள் தோட்டத்தில் மேய்கின்றன.
    • உயர்தரம் பயில்வதற்கு எங்களிற் பெரும்பாலானவர்கள் கணிதத்துறையையும் சிலர் விஞ்ஞானத்துறையையும் நான் கலைத்துறையையும் தெரிவு செய்தோம்.
    • விழாவிற்கு யார்யார் வந்திருந்தனர் என்பது பற்றிய சரியான விபரம் கிடைக்கவில்லை.
    ழ யார்யார் – வினோத பன்மை (பலர்) என்பது பொருள் (2025) வினா
    ழ யார் – ஒருமை
    ழ யாவர் – மரியாமைப் பன்மை

  • ஒவ்வொரு எனும் சொல்லைத் தொடர்ந்து ஒருமை இடம்பெறும் (ஒவ்வொரு என்ற சொல் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரிக்கும்)
    • ஒவ்வொரு மாணவனும் சீறுடையை அணிந்தனர்.
    • ஒவ்வொரு சிற்றூரிலும் கிராம அலுவலகப்பிரிவு உ;ளளது.
    • ஒவ்வொரு கல்லாய் அடுக்கி வைக்கவும்.
    • உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் சுதந்திரமாக அச்சமின்றி வாழவே விரும்பும்.
    • வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் ஒவ்வொரு, பிரேரனைகளும் நன்றாகப் பரிசீலிக்கப்பட்டது.

  1. ஒவ்வொன்று எனும் சொல்லைத் தொடர்ந்து ஒருமை இடம் பெறும், தமிழ் இலக்கணத்தில் “ஒவ்வொன்று” என்பது முக்கியமான ஒருமைச் சுட்டுச்சொல் ஆகும்.
    பொருள் : ஒவ்வொன்றும் தனியாக அல்லது ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக என்று குறிக்கும்.

    ஒருமை : இது ஒவ்வொரு ூ ஒன்று என்பதன் சுருக்கம்
    • அவர்கள் கொடுத்த பரிசுகளில் ஒவ்வொன்றும் அருமை.
    • நீ கூறிய காரணங்களில் ஒவ்வொன்றும் சரியானது.
    • அந்தப் புத்தகத்திலுள்ள கவிதை ஒவ்வொன்றும், சிறந்த பொருளும் நயமும் கொண்டதாக இருக்கின்றது.
    • உலகில் உள்ள தொழில் ஒவ்வொன்றும் தனித்துவமானதும் அத்தியாவசியமானதுமாக விளங்குகிறது.

  • ஒவ்வொருவரும் எனும் சொல்லைத் தொடர்ந்து பன்மை இடம் பெறும்
    (ஒவ்வொருவர் “சொல்வது ஒரு நபரைப்பற்றியே குறிக்கும், ஆனால் பலநபர்களைப் பற்றி சொல்லும் போதும் பன்மையாக செயற்படும்)

    ஒவ்வொருவர் : ஒவ்வொரு நபரும் ஒன்று பொருள்
    இதில் ஒவ்வொருவரை குறிப்பிட்டாலும், பலரையும் சுட்டுகிறது. அதனால் வினை (பனிலை) பன்மை ஆக வேண்டும்.
    • ஒவ்வொருவரும் சிறப்பாக பேசினர்.
    • ஒவ்வொருவரும் தங்கள் (பன்மை) கடமையைச் செய்கிறார்கள்.
    • ஒவ்வொருவரும் தங்கள் பெயரை எழுத வேண்டும்.
    • விழா மண்டபத்திற்குள் மாணவர்கள் ஒவ்வொருவராகச் சென்றனர்.

  • “எல்லா” என்பது பன்மையைக் குறிக்கும் சொல் ஆதலால், இதன் பின் பன்மை இடம்பெற வேண்டும். எல்லா என்றச் சொல்லைத்தொடர்ந்து பன்மை வரும்.
    பொருள் – அனைத்தும் / முழுவதும்

    பயன்பாடு – பன்மை பெயர்ச்சொல்லுக்கு முன் பயன்படுகிறது.
    எல்லாம் என்னால் அனைத்தும் என்பதற்கு சமம், அதனால் தான் இது பன்மை பெயர்ச் சொல்லுடன் மட்டும்தான் சேரவேண்டும்.
    • எல்லா மலர்களும் அழகாக இருக்கின்றன.
    • எல்லா மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற்றனர்.
    • எல்லா நாடுகளிலும் வேலை உள்ளது.
    • கடும் மழையினால் குளங்கள், எல்லாம் நிறைந்தன.

எண்ணுப் பெயர்களைத் தொடர்ந்து ஒருமை வினைமுற்று வரும்
• நெல்லிக் காய் – ஒருமை
• நெல்லிக் காய்கள் – பன்மை

ஒருமைக்கு (து) பன்மைக்கு (ன) முடிப்பு வரவேண்டும்.
எழுவாயிடம் – யார்? எது? எவை?
• பசு கன்றுகளை ஈன்றன . ✘
• பசு கன்றுகளை ஈன்றது. ✔

• வண்டிகள் வரிசையாக நின்றது. ✔
• வண்டிகள் வரிசையாக நின்றன. ✘

• ஆண்டிறுதிப் பரீட்சைகள் ஆரம்பமாகியது. ✘
• ஆண்டிறுதிப் பரீட்சைகள் ஆரம்பமாகின. ✔

• யாவருடைய கையிளும் கையடக்கத் தொலைபேசியின் ஆக்கிரமிப்புக் காணப்படுவதால் தந்தி;ச் சேவை குறைந்துவிட்டது.
எது குறைந்துவிட்டது என்றால், விடை தந்திச்சேவை (ஒருமை)

கொண்டவையாக – பன்மை வினையடை (பன்மை நிலை உருபு)
கொண்டவைகள் – பன்மை
கொண்டதாக – ஒருமை வினையடை


கொண்டதாக –

• அந்தப் புத்தகத்தில் உள்ள கவிதை ஒவ்வொன்றும், சிறந்த பொருளும் நயமும் கொண்டதாக இருக்கின்றது.
• மலையகத்தின் மூத்த எழுத்தாளனான கே. கணேஸ் பற்றி எழுதுவதில் இவ்வார இலக்கிய வளம் பெருமை கொள்கிறது.
• அவர் கூறிய கருத்து மிகவும் பயனுள்ளதைக் கொண்டதாக இருந்தது.
• அந்தத் திரைப்படம் ஒரு சோகமான முடிவைக் கொண்டதாக அமைந்திருந்தது.
• புதிய சட்டம் பல நன்மைகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
• அந்தச் செயல்பாடு மாணவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொண்டதாக விளங்கியது.
• அவனுடைய பதில் நேர்மையைக் கொண்டதாக இல்லை.


கொண்டவையாக –
• அந்த மாமரத்தின் பழங்கள் அனைத்தும் நல்ல சுவையைக் கொண்டவையாக இருந்தன.
• பழங்காலச் சிற்பங்கள் நுட்பமான வேலைப்பாடுகளைக் கொண்டவையாகத் திகழ்கின்றன.
• அவருடைய வாதங்கள் அனைத்தும் வலுவான ஆதாரங்களைக் கொண்டவையாக அமைந்தன.
• காடுகளில் காணப்படும் மூலிகைகள் பல மருத்துவ குணங்களைக் கொண்டவையாக இருக்கின்றன.
• புதிய விதிகள் சில நன்மைகளைக் கொண்டவையாகவும், சில சவால்களைக் கொண்டவையாகவும் காணப்பட்டன.


கொண்டவைகள்
• பழைய நாணயங்களில், அதிக மதிப்பு கொண்டவைகள் சேகரிப்பாளர்களால் தேடப்படுகின்றன.
• அவர் எழுதிய கட்டுரைகளில், ஆழமான கருத்துக்களைக் கொண்டவைகள் பலராலும் பாராட்டப்பட்டன.
• மேசையில் இருந்த புத்தகங்களில், பயனுள்ள தகவல்களைக் கொண்டவைகள் சில மட்டுமே.
• அந்தக் கடையில் விலையுயர்ந்த கற்களைக் கொண்டவைகள் தனியாக வைக்கப்பட்டிருந்தன.

தொகைச்சொற்கள் – தமிழ் இலக்கணத்தில் ஒரு தொகுதியை (ஒரு சில சொற்களை) ஒருமையாகவே கருதுவர்.
கூட்டம் / அணி / படை / துறை /குழு / அமைப்பு / அமைச்சரவை / திட்டம்
• வெள்ளம் போல சனக் கூட்டம் திரண்டது.
• பாடசாலைகயின் மாணவரனி பேசியது.
• இலங்கையின் இராணுவப்படை ஒன்று சேர்ந்தது.
• கல்வித்துறை அறிவித்தது.
• மாணவ மன்றக் குழு பேசியது.
• ஆசிரியர் அமைப்பு அறிப்பு வெளியிட்டது.
• சிறந்த வீர்ர்களை உள்ளடக்கிய விளையாட்டுக்குழு இந்தியா நோக்கிப் புறப்பட்டது.
• இன்று ஜனாதிபதி தலைமையில் கூடும் அமைச்சரவை நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக விரிவாக ஆராயவுள்ளது.
• களியாட்ட விழாவைக் காண நண்பர்கள் கூட்டம் மைதானத்திற்குச் சென்றது.
• நீயும் ஏனைய நண்பர்களும் ஒத்துழைப்பீர்களாயின் எங்கள் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும்.

குழுக்கள் என பன்மையில் வந்தால், பயனிலை பன்மையில் வரும்.
• மாணவர் குழுக்கள் ஊரராககச் சென்று வெள்ள நிவாரணத்துக்காக பொருள்களையும் பணத்தையும் சேகரித்தன.

எதிர்மறை முடிப்பு வாக்கியம்
• ஆசிரியர் உத்தரவிட்டாலன்றி அவன் எதையும் செய்யான்.
செய்யான் – என்பது எதிர்கால எதிர்மறை ஆண்பால் வினைமுற்று
• நேற்று பலத்த மழை பெய்த போதிலும் பெருஞ்சேதங்கள் ஏற்படலில்லை.
• அவனும் உன்னுடன் சென்றால்தான் அவர் அதை நம்பிக்கையுடன் ஒப்படைப்பார்.

மேலும் சில வழுக்கள்
1) அ) செய்திகள் வாசிப்பது கண்ணன். (தவறு)
ஆ) செய்திகள் வாசிப்பவர் கண்ணன். (சரி)

2) அ) சமுகத்தை முன்னேற்றுவது பொருப்புள்ள குடி மக்களின் கடமையாகும். (தவறு)
ஆ) சமுதாயத்தை முன்னேற்றுவது பொறுப்புள்ள குடிமக்களின் கடமையாகும். (சரி)
சமுகம் – பெரியோர்களை முன்னிலைப்படுத்துவது
சமுதாயம் – மக்கள் கூட்டம்

3) அ) பேராதனைப் பல்கலைக்கழக அணி போட்டியில் வெற்றி பெற்றுச் சுழல் கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டு. (தவறு)
ஆ) பேராதனைப் பல்கலைக்கழக அணி போட்டியில் வெற்றி பெற்றுச் சுழல் கிண்ணத்தை தங்க வைத்துக் கொண்டு. (சரி)

4) அ) நல்லவைகளையும், கெட்டவைகளையும் பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன. (தவறு)
ஆ) நல்லவையும், கெட்டவையும் பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன. (சரி)

5) அ) இவர்கள் ஒரும் தொல்லையைச் சொல்லி முடியாது. (தவறு)
ஆ) இவர்கள் ஒரும் தொல்லையைச் சொல்வது முடியாது. (சரி)

6) அ) நல்லதையும், கெட்டதையும் பார்த்து அதனுள் நல்லதைக் கொள்க. (தவறு)
ஆ) நல்லதையும், கெட்டதையும் பார்த்து அவற்றுள்; நல்லதைக் கொள்க. (சரி)
நல்லது மற்றும் கெட்டது – பன்மை ஆதலால் ‘அவற்றுள்’ என பன்மையில் வரவேண்டும்.

7) அ) இந்தச் செய்தியை பற்றிப் பல எழுத்தாளர்கள் குறிப்பிடுகிறார்கள். (தவறு)
ஆ) இந்தச் செய்தியை எழுத்தாளர் பலரும் குறிப்பிடுகிறார்கள். (சரி)
‘பற்றி’ என்பது அவசியமற்றது, எழுத்தாளர் பலரும் என்றிருத்தல் வேண்டும்.

8) அ) பாரதி வெள்ளிக்கிழமைகள் தோறுமு; இந்த கோவில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. (தவறு)
ஆ) வெள்ளிக்கிழமை தொறும் இந்தக் கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. (சரி)

9) அ) பத்துப் பழங்களில் ஒரு பழமே நல்லன. (தவறு)
ஆ) பத்துப் பழங்களில் ஒரு பழமே நல்லது. (சரி)

10) அ) கண்ணன் அவற்றையெல்லாம் கண்டான். (தவறு)
ஆ) கண்ணன் அனைத்தையும் கண்டான். (சரி)

11) அ) நான் பால் சாப்பிட்டேன் (தவறு)
ஆ) நான் பால் குடித்தேன் (சரி)

12) அ) பல ஊர்த் தண்ணீர்கள் சிலர் உடம்புக்குப் பிடிக்காது (தவறு)
ஆ) பல ஊர்த் தண்ணீர் சிலர் உடம்புக்குப் பிடிக்காது. சரி (தண்ணீர்கள் என்பது தவறு)

13) அ) ஒரு எழுத்தாளர் ஒரு கூட்டத்துக்குப் போய் ஒரு சொற்பொழிவு செய்தார். (தவறு)
ஆ) ஒர் எழுத்தாளர் ஒரு கூட்டத்துக்குப் போய் சொற்பொழிவாற்றினார். (சரி)

14) அ) பாரதியார் சிறுவனாய் இருக்கும் போது பாட்டெழுதினார். (தவறு)
ஆ) பாரதியார் சிறுவராய் இருந்த போதே பாட்டெழுதினார்.

15. அ) இங்குள்ளது எல்லாம் நல்ல தாள்களே. (தவறு)
ஆ) இங்குள்ளவை எல்லாம் நல்ல தாள்களே (சரி) “இங்குள்ளவை” என பன்மையில் வரவேண்டும்.

16. அ) நீங்கள் இங்கு கலந்துரையாடுவதன்றிப் பெசவும் வேண்டும். (தவறு)
ஆ) நீங்கள் இங்குக் கலந்துந்துரையாடுவதோடு பேசவும் வேண்டும். (சரி)

17. அ) மாடுகள் நிறைய இருப்பதால் அங்கு கொசுக்கள் பெருகுவதற்கு மிகவும் வசதியாய் இருக்கிறது. (தவறு)
ஆ) மாடுகள் அதிகம் இருப்பதால் அங்கு கொசுக்கள் பெருகுவதற்கு அதிக வசதி இருக்கிறது. (சரி)

18) அ) இவர் மாத வருமானம் ஆயிரம் ரூபாய்கள். (தவறு)
ஆ) இவர் மாத வருமானம் ஆயிரம் ரூபாய். (சரி)

19) அ) கை, கால் உடைந்துவிட்டது. (தவறு)
ஆ) கையும், காலும் உடைந்துவிட்டன. (சரி)

20) அ) உணவில்லாமல் வாழ முடியாது. (தவறு)
ஆ) உணவில்லாமல் வாழ்வது முடியாது. (சரி)

21) அ) நம் நாட்டில் பெரும்பாலோருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. (தவறு)
ஆ) நம் நாட்டில் பெரும்பாலோர் எழுதவும் படிக்கவும் அறியார். (சரி)

22) அ) புல், பூண்டு இல்லையானால் ஆடு மாடு வாழாது. (தவறு)
ஆ) புல்பூண்டுகள் இல்லையானால் ஆடு மாடுகள் வாழா (சரி)

23) அ) தகுந்த மருத்துவ வசதியில்லாமையால் அவன் இறக்க நெரிட்டது. (தவறு)
ஆ) தகுந்த மருத்துவ வசதியில்லாமையால் அவன் இறந்தான். (சரி)

24) அ) அன்பு என்பது விலை கொடுத்து வாங்கும் பொருள் இல்லை. (தவறு)
ஆ) அன்பு என்பது விலை கொடுத்து வாங்கும் பொருள் அன்று. (சரி)

25) அ) இலங்கை அரசும் இந்திய அரசும் திட்டம் வகுத்திருந்தது. (தவறு)
ஆ) இலங்கை அரசும் இந்திய அரசும் திட்டம் வகுத்திருந்தன. (சரி)

26) அ) நில நடுக்கத்தில் இறந்திருக்கப்பட வேண்டும். (தவறு)
ஆ) நிலநடுக்கத்தால் இறந்திருத்தல் வேண்டும். (சரி)

27) அ) வீடுகளின் கூறைகளைத் தீப்பற்றின.(தவறு)
ஆ) வீடுகளின் கூறைகளில் தீப்பற்றியது. (சரி)

இங்கு குறிப்பிட்ட தவறான வாக்கியங்களில், பலசற்றுள் எழுவாய் இல்லை. எழுவாய்ப் பற்றிக் கவலைப்படாமலேயே பவர் எழுதுகிறார்கள். மேலே காணும் வாக்கியங்களில் ‘எழுவாய்’ இடம் யார்? எது? எவை? என்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்தால், தவறு புலனாகும்.

Loading

Share: 

No comments yet! You be the first to comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *