Homeதமிழ் மொழிவளம்செய்யுள்களை சந்திபிரித்து எழுதுவது மற்றும் வாசிப்பது எப்படி?

செய்யுள்களை சந்திபிரித்து எழுதுவது மற்றும் வாசிப்பது எப்படி?

செய்யுள்களை சந்திபிரித்து எழுதுவது மற்றும் வாசிப்பது

தமிழ் மொழியின் வரலாறென்பது 3000 – 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததொன்றாகும். நீண்ட வரலாற்iயுடைய தமிழ் மொழி சிறந்த இலக்கிய வளமுடைய மொழியாகும். 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கிய தொடர்ச்சியுடைய தமிழ் மொழியின் இலக்கியங்களை அதன் காலகட்டத்திற்கு ஏற்ப வகைப்படுத்தி பார்க்கலாம்.
தமிழ் மொழிக்கு கிடைத்த முதல் நூல் தொல்காப்பியமாக இருந்தாலும், அதற்கு முன் பல இலக்கண, இலக்கிய நூல்கள் இருந்திருக்கலாம்; என்பது மொழியியலாளர் கருத்து. காரணம் தொல்காப்பியத்தில் “என்ப”, “மொழிப” என்ற சொற்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது. இதன் பொருள் “என்று கூறும்”, “என்று மொழியும்” என்பதாகும். இதை அவதானிக்கும் போது தொல்காப்பியத்திற்கு முன் பல நூல்கள் தோற்றம் பெற்றிருந்தன என்பதை அறியலாம்.
தமிழ் மொழியின் இலக்கிய வரலாற்றை கால அடிப்படையில், சங்ககாலம், சங்கமருவிய காலம், பல்லவர்காலம், சோழர்காலம், விஜயநகர நாயக்கர் காலம், போர்த்துகேயர் காலம், தற்காலம் என்று வகைப்படுத்துவர். தமிழ் நாட்டை ஆண்ட அரசியியல் குழுக்களையும், இலக்கிய செழுமையையும் கொண்டு இப்பாகுபாடு வகைப்படுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் 21ம் ஆம் நூற்றாண்டு வரை பல இலக்கிய வடிவங்கள் தோற்றம் பெற்றன. அந்த வடிவங்களில் 18ம் நூற்றாண்டுக்கு முன் தோற்றம் பெற்ற இலக்கியங்களை ஆரம்ப கால செய்யுள் இலக்கியம் என்றும், அதன் பின் தோற்றம் பெற்ற இலக்கியங்களை நவீன இலக்கியம் (உரைநடை) இலக்கியம் என்றும் பாகுபடுத்தினர். இம் மாற்றம் பாரதியின் பின் நிகழ்ந்தவொன்றாகும். ஆங்கிலேயேரின் வருகை மற்றும் அவர்களின் ஆங்கிலக் கல்விமுறை என்ற பல காரணங்கள் தமிழ் மொழியில் நவீன இலக்கியத்தின் தோற்றத்திற்கு காரணமாக அமைந்தன.
சங்க காலத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்களுக்கும் பிற்பட்ட காலங்களில் தோற்றம் பெற்ற இலக்கியங்களுக்கும் சில வேறுபாடுகள் உண்டு;. காரணம் சங்க காலத்தில் தோற்றம் பெற்ற செய்யுள் இலக்கியங்கள் தனித்தமிழ் இலக்கியமாக காணப்பட்டதுடன் பிற்பட்ட ஒவ்வொரு காலங்களிலும் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் (வடமொழி) பிறமொழி கலப்பு இலக்கியமாக தோற்றம் பெற்றன.
சங்ககாலம் தொட்டு 18ம் நூற்றாண்டு வரை அகவல், வஞ்சி, வெண்பா, கலி, கட்டளை, விருத்தம் என்று பல பா வகைகளின் இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எவ்வாறெனினும் சங்ககாலம் தொட்டு 18ம் நூற்றாண்டு வரை இலக்கிய சந்தி பிரிப்பில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை நாம் பார்க்கவிருக்கும் விதிமுறைகளை சரியாக கற்றுக் கொள்கின்றப் போது செய்யுளை எவ்வித பிழையும் இன்றி சந்தி பிரித்து எழுதவும், சந்திபிரித்து வாசிக்கவும் இயலுமாக இருக்கும்.

சந்தி பிரிக்கும் விதிமுறைகள்

  1. உயிர் மெய் பிரிப்பு
  2. ங், ந், ஞ் ஆகிய எழுத்துகள் – ம் ஆதல்
  3. வல்லின ஒற்றுகள் உகரம் பெறல்
  4. அரையுயிர் – ய், வ் (யகர, வகர வருக்க எழுத்துகள் உயிர் எழுத்தாதல்)
  5. ள் – ண் – ட் இனவெழுத்தாக தொழிற்படல்
  6. ல் – ன் – ற் இனவெழுத்தாக தொழிற்படல்
  7. ட் ற் – தகரமாக மாற்றமடைதல்
  8. விகாரம் – கெடுதல் , தோன்றல், திரிதல்
  9. மெய் உயிராதல் (அரிதாக இடம் பெறும்)
  10. உயிர் மெய்யாதல் (அரிதாக இடம் பெறும்)

01. உயிர் மெய் பிரிப்பு

  1. தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களை முதல் எழுத்து, சார்பெழுத்தென்றும். உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெயெழுத்து என்றும் வகைப்படுத்துவர்.
  மெய்உயிர் எழுத்துகள்
ஒள
க்காகிகீகுகூகெகேகைகொகோகௌ
ங்ஙாஙிஙீஙூஙெஙேஙைஙொஙோஙௌ

மேலே உள்ள அட்டவணையில் அ – ஒள வரையான 12 எழுத்துகள் உயிர் எழுத்துக்கள். க் – ன் வரையான 18 எழுத்துக்கள் மெய்யெழுத்துகள். ஆயுதம் தவிர்ந்த ஏனைய 216 எழுத்துகள் உயிர் மெய் எழுத்துக்கள் ஆகும்.
இவ் உயிர்மெய்யெழுத்துக்கள், மெய்யெழுத்தும் உயிரெழுத்தும் சேர்ந்து பிறக்கின்றன. சந்தி பிரிப்பு முறையில் 50 விகிதம் உயிர் மெய் பிரிப்பே ஆகும்.

க்

இங்கு “க்” என்ற மெய்யும் “அ” என்ற உயிரும் இணைந்து “க” என்ற உயிர் மெய் தோற்றம் பெற்றுள்ளதைக் காணலாம். இவ்வாறாக செய்யுள்களில் காணப்படும் நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி முதல் எழுத்தும், உயிரும் மெய்யுமாக பிரியும் அல்லது சேறும்.
உதாரணம் – நீரெடுத்து, போரெடுத்து, வானமளர்ந்த, அடக்கமுடையார், சுடுமயானத் திடை,
போன்ற அடிகளை கவனியுங்கள்,
அ) நீரெடுத்து என்பது – “நீர்+ எடுத்து என்று பிரியும்.
“ரெ” என்ற உயிர் மெய்யெழுத்து, “ர்” என்ற மெய்யாவும் “எ” உயிராகவும் பிரியும்
நீர் – நிலைமொழி
எடுத்து – வருமொழி

இவ்வாறாக பிரிந்த எழுத்துக்கள் நிலைமொழியின் கடைசி எழுத்தாக “ர்” தங்கிவிட வருமொழி முதல் எழுத்தாக “எ” வரும்.
ழூநிலை மொழி என்பது இரண்டு சொற்களைப் பிரிக்கும் போது முதல் சொல் நிலைமொழி அதனைத் தொடர்ந்து வரும் சொல் வருமொழி.
ஆ) போரெடுத்து – போர்+எடுத்து
போர் எடுத்து என்று இரண்டாக பிரியும் போது, “ரெ” என்ற உயிர் மெய்யெழுத்து நிலைமொழி ஈற்றில் “ர்” என்ற மெய்யும், வருமொழி முதல் “எ” என்ற உயிரும் பெறும். இதனால் போரெடுத்து என்ற சொல்லை போர் எடுத்து என்று எழுத வேண்டும்.
இ) வானமளர்ந்த – வானம் ூ அளர்ந்த
மேலே உள்ள வானமளர்ந்த என்ற சொல்லில் பிரிய வேண்டியது “ம” என்ற உயிர்மெய்யெழுத்தாகும். இவ்வுயிர்மெய்யெழுத்து பிரிந்து நிலைமொழிஈற்றில் “ம்” என்ற மெய்யாகவும் ஆகவும், வருமொழி முதல் “அ” என்ற உயிராகவும் வந்துள்ளது. இதனால் வானமளர்ந்த என்பதை வானம் அளர்ந்த என்று எழுத வேண்டும்.

ஈ) அடக்கமுடையார் – அடக்கம்+ உடையார்
மேலே உள்ள அடக்கமுடையார் என்ற சொல்லில் பிரிய வேண்டியது “மு” என்ற உயிர்மெய்யெழுத்தாகும். இவ்வுயிர்மெய்யெழுத்து பிரிந்து நிலைமொழிஈற்றில் “ம்” என்ற மெய்யாகவும் ஆகவும், வருமொழி முதல் “அ” என்ற உயிராகவும் வந்துள்ளது. இதனால் அடக்கமுடையார் என்பதை அடக்கம் உடையார் என்று எழுத வேண்டும்.
உ) சுடுமயானத் திடை – சுடுமயானத்து இடை
மேலே உள்ள சுடுமயானத் திடை என்ற சொல்லில் பிரிய வேண்டியது “தி” என்ற உயிர்மெய்யெழுத்தாகும். இவ்வுயிர்மெய்யெழுத்து பிரிந்து நிலைமொழிஈற்றில் “த்” என்ற மெய்யாகவும் ஆகவும், வருமொழி முதல் “இ” என்ற உயிராகவும் வந்துள்ளது. இதனால் சுடுமயானத் திடை என்பதை சுடுமயானத்து இடை என்று எழுத வேண்டும்.
ழூஇங்கு தோன்றியுள்ள நிலைமொழி ஈற்றெழுத்தான (த் ூ உ ஸ்ரீ து) என்பது பற்றி உகரம் பெறல் என்ற விதியில் காணலாம்.
பயிற்சி
1) படரெலாம் 2) நின்றாளென்னனை 3) களிறனைய
4) நீங்களைவீரு மொருவீரா யகலிடத்தை.
5) குகனென்பா னிந்தநின்ற குரிசி லென்றான்.


விடை
படரெலாம் – படர் எலாம் (ர்+ எ)
நின்றாளென்னனை – நின்றாள் என்னை (ள்+ எ)
களிறனைய – களிறு அனைய (ற்+ அ)
நீங்களைவீரு மொருவீரா யகலிடத்தை – நீங்கள் ஐவீரும் ஒரு வீராய் அகல் இடத்தை
குகனென்பா னிந்தநின்ற குரிசி லென்றான் – குகன் என்பான் இந்த நின்ற குரிசில் என்றான்.

02) ங், ந், ஞ் ஆகிய எழுத்துகள் – “ம்” ஆக திரிதல்

தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களில் நிலை மொழி ஈற்றெழுத்தில் வரும் “ஞ், ங், ந்” ஆகிய எழுத்துக்கள்; மூன்றும் “ம்” ஆக திரியும். இவ்வெழுத்துக்கள் நிலைமொழியில் இறுதியாக வரும்போது மட்டுமே ம் ஆக திரியும் ஏனைய சந்தர்ப்பங்களில் இயல்பாக வரும்.

உதாரணம் –
1) சுற்றத்தார் தெவரொடுந் தொழ நின்ற – சுற்றத்தார் தெவரொடும் தொழ நின்ற
2) பெறுஞ் செல்வம் – பெரும் செல்வம்
3) நன்னூலாங் கடலில் – நன்னூலாம் கடலில்
4) யாவருக்குந் தொழு.. – யாவருக்கும் தொழு…
5) பழி வளர்க்குஞ் செவிலி – பழி வளர்க்கும் செவிலி
6) செய்யுறங் கொடுமை – செய்யுறம் கொடுமை
மேலே குறிப்பிட்ட உதாரணங்களைக் கொண்டு பார்க்கும் போது சொல்லின் கடைசி எழுத்தாக ங், ந், ஞ் ஆகிய எழுத்துகள் வந்து புணரும் போது மட்டும் இவ்வெழுத்துகள் மூன்றும் “ம்” ஆக திரிகின்றதைக் கவனத்தில் கொள்க.

வல்லின ஒற்றுகள் உகரம் பெறல்
செய்யுளை சந்திபிரித்து எழுதும் போது அல்லது வாசிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் வல்லின ஒற்றுக்கள் உகரம் பெறல் என்பது முக்கியமானதொன்றாகும். வல்லின எழுத்துக்கள் என்பது மார்பினை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் எழுத்துக்கள் ஆகும். இவ்வெழுத்துக்கள் நிலைமொழி ஈற்றில் மெய்யெழுத்துகாக (சொல்லின் இறுதியில்) வராது, அவ்வாறு மெய்யெழுத்தாக தோன்றும் போது அவ்வல்லினம் உயிர் எழுத்துக்களில் “உ” என்ற என்ற எழுத்திதை ஏற்று வரும் இதனையே வல்லினம் உகரம் பெறல் என்ற விதி விளக்குகின்றது.


இவ்வகையான வல்லின மெய்கள் உகரம் பெறுவதை குற்றியலுகரம் என்று இலக்கணக்காரர்கள் கூறுவார்கள். குற்றியலுகரம் என்பது “தனிக் குற்றெழுத்து அல்லாத ஏனைய எழுத்துக்களின் பின் வரும் வல்லின மெய்யின் மேல் ஏறி வரும் உகரம் குற்றியலுகரம் எனப்படும்.” ழூசார்பெழுத்துக்கள் என்றப் பகுதியைக் பார்க்க
உதாரணம் – ஆடு, பத்து
ஆகிய சொற்கள் தனி குற்றெழுத்து அல்லாத பிற எழுத்தக்களின் பின் வந்த வல்லின மெய்யின்மேல் ஏறி வரும் உகரம் ஆகும். இதனை குற்றியலுகரம் என்பர்.

இவ்வாறு தனி குற்றல்லதா வல்லின மெய் பெறும் உகரம் போன்று செய்யுள்களில் அதிகம் இடம் பெறுவது உண்டு அதற்கான உதாரணங்களைப் பார்ப்போம்.
உதாரணம் – மங்கைதனக் கேற்ற.. – மங்கை தனக்கு ஏற்ற
இங்கு தடித்த எழுத்தில் காட்டிய “கே” என்ற எழுத்தினை உயிர் மற்றும் மெய் யெழுத்தாக பிரித்தால், “க்”, “ஏ” என்று எழுத முடியும், அவ்வாறு எழுதினால்
“மங்கை தனக்க் ஏற்ற” என்று இரண்டு “க்க்” வல்லின எழுத்துக்கள் பெறும் இந்த சந்தர்ப்பமே சொல்லிறுதி வரும் வல்லின மெய்கள் “உகரம்” பெறும் இடமாகும். இப்போது இந்தச் சொல்லை “மங்கை தனக்கு ஏற்ற” என்று எழுத முடியும்.
மாலை குரங்கிற் களிப்பாரோ … – மாலை குரங்கிற்(க்)கு அளிப்பாரோ
விரகிலருக் கியாதுரைப்பேம்… – விர(க்)கு இலர்க்(க்)கு இயாதுரைப்பேம்
தன் மெய்யை நிற்ப தாக்கி – தன் மெய்யை நிற்ப(த்)து ஆக்கி
சங்கிட் டெறியக் குரங்கிளநீர் – சங்கிட்(ட்)டு எறியக் குரங்(க்)கு இளநீர்
மேற்கண்ட உதாரணங்களை அவதானிப்பின் நிலை மொழி ஈற்றெழுத்து வல்லின மெய்யாக வருகின்றப் போது அச் சொல் “உ” என்ற உயிர் எழுத்தைப் பெற்று வருவதைக் காணலாம்.

04) அரையுயிர் – ய், வ் (யகர, வகர வருக்க எழுத்துகள் உயிர் எழுத்தாதல்)

தமிழ் மொழியில் “ய்”, “வ்” உம் அரை உயிர்கள் என்றும் உடம்படு மெய்கள் என்றும் அழைக்கப்படும்.
அரை உயிர் என்றால் – ய், வ் என்ற எழுத்துகள் உயிர் எழுத்துப் போன்றும் மெய்யெழுத்து போன்றும் ஒலிக்கும்.
உதாரணம் – ய் + – அய் (இங்கு “ஐ” என்ற உயிர் எழுத்துக்கு இணையாக ஒலிக்கிறது.)
வ் ஸ்ரீ – அவ் (இங்கு “ஒள” என்ற உயிர் எழுத்துக்கு இணையாக ஒலிக்கிறது.)
உடம்படுமெய் என்றால் – நிலைமொழி இறுதியிலும், வருமொழி முதலிலும் உயிர் எழுத்துகள் வருமாயின் இவ்விரண்டு உயிர்கள் இணைந்து (உடம்படுத்த) வரும் மெய்யெழுத்துக்கள் “ய்”, “வ்” ஆகிய இரண்டும் ஆகும். இதனையே உடம்படு மெய்கள் என்போம்.
ய் தோன்றல் – இ, ஈ, ஐ என்ற எழுத்துக்களை அடுத்து 12 உயிர் வரின் யகரம் தோன்றும்.
கிளி + ஐ – கிளியை
மணி+ அழகு – மணியழகு
வ் தோன்றல் – இ, ஈ, ஐ தவிர்ந்த ஏனைய எழுத்துக்களை அடுத்து 12 உயிர் வரின் வகரம் தோன்றும்.
பலா+ இலை – பலாவிலை
கோ+ இல் – கோவில்
மேலே எடுத்துக்காட்டப்பட்ட உடம்படு மெய் தோன்றலை செய்யுள்களில் அதிகம் காண முடிகிறது.
உதாரணம் – அறந்தானே யென்கின்ற வயனின்றா – அறந்தானே என்கின்ற அயல் நின்றாள்.
என்று பிரியும் இங்கு இடம் பெற்றுள்ள “யெ” என்ற யகர வரிசை வருக்க உடம்படு மெய் நேரடியாக உயிர் எழுத்தான “எ” ஆக மாறியுள்ளது. அதே போல் “வ” என்ற வகர வரிசை வருக்க உடம்படு மெய் “அ” என்ற உயிர் எழுத்தாக மாறியுள்ளது. இதனையே அரைவுயிர் அல்லது உடம்படு மெய் என்ற விதியில் நோக்கினோம்.
ழூ“வருக்க எழத்து என்பது – மெய் எழுத்து உயிரோடு இணைந்து வரும் உயிர் மெய் எழுத்துகள், க் என்ற மெய்யின் வருக்க எழுத்துகள்: க, கா, கி, கீ, கு, கூ, கெ …. ஆகிய எழுத்துகள்)
யைய வன்வி னிறைந்தாளை யுரை யென்ன – ஐய அன்பின் நிறைந்தாளை உரை என்ன
அளந்த வுலகெல்லாம் – அளந்த உலகு எல்லாம்
தேய வுடர் எலாம் – தேய உடர் எலாம்
யொருத்தி யன்றே யிடரிலா யறிந்திலையே – ஒருத்தி அன்னே இடர் இலா அறிந்திலையே
போகும் வேளை யதற்கு – போகும் வேளை அதற்கு
மேற்படி எடுத்துக் காட்டுகளில் “ய்”, “வ்” ஆகிய வருக்க எழுத்துக்கள் உயிர் எழுத்தாக மாறுவதைக் கண்டோம். இதே போல் செய்யுள்களில் காணப்படும் அனைத்து எழுத்துக்களும் மாறாது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்பவே மாறும். அதாவது யார், யாது, யாம், வாள், வாய்மை என்ற சொற்களுக்கு பொருள் உண்டு அவ்வாறு பொருள் அல்லாத சொற்கள் உயிர் ஒலி பெறும் சந்தர்பத்தில் மாத்திரமே உடம்படு மெய்கள் உயிராக திரியும்.


5) ள் – ண் – ட் இனவெழுத்தாக தொழிற்படல்

தமிழ் மொழியில் உள்ள செய்யுள்களில் மாத்திரமன்றி தற்காலத் தமிழிலும் இவ்வெழுத்துக்கள் இனவெழுத்தாக தொழிற்படுவதை அவதானிக்கலாம். ள், ண், ட் ஆகிய வளைநா ஒலிகள் புணர்சியின் போதும், செய்யுள்களில் நிலைமொழி கடைசியாக வரும் போதும் அருகருகில் இவ்வெழுத்துக்கள் தோன்றும் போதும் இவ்வெழுத்துகள் அதிகம் தொடர்புடையதாக எழுதப்படும்.
உதாரணம் –
அ) புணர்சியின் போது –
முள்+ செடி – முட்செடி
முள்+ கிரீடம் – முட்கிரீடம்
வாள்+ பெட்டி – வாட்பெட்டி
மேற்படி புணர்சியில் ள் என்ற எழுத்து ட் என்ற எழுத்தாக திரிபடைவதைக் காணலாம்.
ஆ) நிலை மொழி ஈறாக வரும் போது –
டோட் கைவீரக் – தோள் கைவீரக்
வயனின்றா டனை நோக்கி – அயன் நின்றாள் தனை நோக்கி
மேற்படி உதாரணங்களில் நிலை மொழி ஈராக வந்த ட் என்ற எழுத்து ள் ஆக மாறியுள்ளது.
இ) அருகருகில் இவ்வெழுத்துக்கள் தோன்றும் –
வேண்டாம், கண்டேன், பண்டு, தண்டனை


6) ல் – ன் – ற் இனவெழுத்தாக தொழிற்படல்

மேற்படி கொடுக்கப்பட்ட எழுத்துகள் மூன்றும் செய்யுள்களிலும் தற்காலத்திலும் இனவெழுத்தாக செயற்படுவதைக் காணலாம். ல் – ன் – ற் ஆகிய எழுத்துகள்; புணர்சியின் போதும், செய்யுள்களில் நிலைமொழி கடைசியாக வரும் போதும் அருகருகில் இவ்வெழுத்துக்கள் தோன்றும் போதும் இவ்வெழுத்துகள் அதிகம் தொடர்புடையதாக எழுதப்படும்.

அ) புணர்சியின் போது
பல்+ பொடி – பற்பொடி
பல்+ கள் – பற்கள்
பகல்+ பொழுது – பகற்பொழுது
இவ்வாறாக புணர்ச்சியின் போது ல் என்ற எழுத்து ற் என்ற எழுத்தாக புணர்ந்துள்ளது.
ஆ) நிலை மொழி ஈறாக வரும் போது
கழற்கான் மைந்த – கழல் கால் மைந்த
மதியினிற் புலை நாத்திகம் – மதியினில் புலை நாத்திகம்
மாய வுலகினிற் – மாற உலகினில்
விலங்கற் றிண் – விலங்கன் திண்
மேற்படி எடுத்துக்காட்டுகளில் நிலைமொழி ஈற்றெழுத்துகளான ன் என்ற எழுத்து ற் ஆக மாறியுள்ளதையும், ல் என்ற எழுத்து ற் ஆக மாறியுள்ளதையும், ற் என்ற எழுத்து ல் ஆக மாறியுள்ளதையும் காண்க.
இ) அருகருகில் இவ்வெழுத்துக்கள் தோன்றும் –
கன்று, வென்று, பன்றி, மன்றம்
உதாரணம் –
பெற்றதாற் பெறுஞ் செல்வம் – பெற்றதால் பெறும் செல்வம்
கலியேகக் கழற்கான் மாய – கலி ஏக கழல் கால் மாய
நற்கிளியே கூறாயே – நல் கிளியே கூறாயே
நங்கையவள் பாற் சென்று – நங்கை அவள் பால் சென்று
புவியிற் கொங்கு – புவியில் கொங்கு
கூறுதியாற் பைங்கிளியே – கூறுதியால் பைங்கிளியே
மேற்படி உதாரணங்களின் மூலம் ல், ன், ற், ஆகிய எழுத்துகள் இனமாக செயற்பட்டுள்ளதைக் காணலாம்.

07) ட், ற் – தகரமாக மாற்றமடைதல்


செய்யுள்களில் “ட்”, “ற்” ஆகிய இரண்டு எழுத்துக்களும் புணர்ச்சியில் “த்” என்ற தகர வருக்க எழுத்துகளாக மாறுவதைக் காணலாம்.
உதாணரம் –
தண் டாமரை – தண் தாமரை
றிரள் பழத்து – திரள் பழத்து
றானு மேறினான் – தானும் ஏறினான்
முதற்றேவி – முதல் தேவி
காராவின் றுயருடைய – காராவின் துயர் உடைய
றாமன்றே விலங்கற்றிண் டோட் – தாம் அன்றே விலங்கன் திண் தோள்
வயனின்றா டனை நோக்கி – அயல் நின்றாள் தனை நோக்கி
மேற்படி உதாரணங்களில் ற், ட், ஆகிய வருக்க எழுத்துகள், தகர வரிசை வருக்க எழுத்துகளாக மாறி வருவதைக் காண்க.

08) விகாரம் – கெடுதல் , தோன்றல், திரிதல்

தமிழ் மொழியில் காணப்படும் செய்யுள்களில் மேற்படி விகாரப்படுவது இயல்பாகும். செய்யுள்களில் சொற்கள் புணரும் போது ஒர் எழுத்து இல்லாமல் போவதும், புதிய எழுத்தொன்று தோன்றுவதும், ஒரெழுத்து மற்றுமொர் எழுத்தாக மாறுவதும் அதிகம் இடம் பெறும்.இவ்வாறு தனி குற்றல்லதா வல்லின மெய் பெறும் உகரம் போன்று செய்யுள்களில் அதிகம் இடம் பெறுவது உண்டு அதற்கான உதாரணங்களைப் பார்ப்போம்.
உதாரணம் – மங்கைதனக் கேற்ற.. – மங்கை தனக்கு ஏற்ற
இங்கு தடித்த எழுத்தில் காட்டிய “கே” என்ற எழுத்தினை உயிர் மற்றும் மெய் யெழுத்தாக பிரித்தால், “க்”, “ஏ” என்று எழுத முடியும், அவ்வாறு எழுதினால்
“மங்கை தனக்க் ஏற்ற” என்று இரண்டு “க்க்” வல்லின எழுத்துக்கள் பெறும் இந்த சந்தர்ப்பமே சொல்லிறுதி வரும் வல்லின மெய்கள் “உகரம்” பெறும் இடமாகும். இப்போது இந்தச் சொல்லை “மங்கை தனக்கு ஏற்ற” என்று எழுத முடியும்.
மாலை குரங்கிற் களிப்பாரோ … – மாலை குரங்கிற்(க்)கு அளிப்பாரோ
விரகிலருக் கியாதுரைப்பேம்… – விர(க்)கு இலர்க்(க்)கு இயாதுரைப்பேம்
தன் மெய்யை நிற்ப தாக்கி – தன் மெய்யை நிற்ப(த்)து ஆக்கி
சங்கிட் டெறியக் குரங்கிளநீர் – சங்கிட்(ட்)டு எறியக் குரங்(க்)கு இளநீர்
மேற்கண்ட உதாரணங்களை அவதானிப்பின் நிலை மொழி ஈற்றெழுத்து வல்லின மெய்யாக வருகின்றப் போது அச் சொல் “உ” என்ற உயிர் எழுத்தைப் பெற்று வருவதைக் காணலாம்.

Skill
100

தமிழ் மொழியைக் கற்றிடுங்கள்..

FOUNDER DIRECTOR

Agaram Dhines

About Me

Name: Th. Dineshkumar (Agaram Dhines)
Profession: Tamil Language Teacher | YouTuber | Online Tutor

I am a passionate and experienced Tamil language and literature teacher with over 8 years of teaching experience. I currently serve as a Sri Lanka Teacher Service (SLTS II/2) educator, guiding students from Grades 6 to 13.

Academic Qualifications:

  • Bachelor of Arts (Hons) in Tamil & Tamil Language Teaching
  • Diploma in Artificial Intelligence and Graphic Designing

Professional Highlights:

  • I run a popular educational YouTube channel named “Agaram Dhines”, where I create and share free Tamil lessons.
  • I teach students not only from Sri Lanka, but also Tamil language enthusiasts from around the world.
  • I offer personalized online classes, supporting both school curriculum and Tamil language skill development.

My Services Include:

  • Curriculum-based teaching for Grades 6 to 13
  • Special focus on literature, grammar, and writing skills
  • Model exams, practice question papers, and video-based lessons
  • Speaking and writing skill development for non-native Tamil learners

Share: 

No comments yet! You be the first to comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *