Homeதமிழ் மொழிவளம்அகராதி ஒழுங்கில் அமைந்த சொற்றொகுதி

அகராதி ஒழுங்கில் அமைந்த சொற்றொகுதி

தமிழ் அரிச்சுவடியிலுள்ள சொற்களை அகர வரிசைப்படி அமைப்பது அகராதி என்றுப் பொருள்படும். ஆரம்ப காலங்களில் நிகண்டுகளாக காணப்பட்ட இவை பின் ஆங்கிலேயர் வருகையின் பின் அகராதிகளாக மாற்றமுற்றன. தமிழ் மொழியில் முதலில் தோன்றிய சதுரகராதியே பின் அகராதி ஆராய்ச்சிக்கும் அகராதியின் வளர்ச்சிக்கும் உதவியாக அமைந்து எனலாம்.
தமிழ் மொழியில் உள்ள நிகண்டுகள் போலவே ஆரம்பகால அகராதியும் முதல் எழுத்தை வைத்து மட்டும் ஒழுங்கு படுத்தும் முறை காணப்பட்டது. ஆனால் சதுரகதியை வீரமாமுனிவர் தோற்றுவித்ததன் பின் இரண்டாம் எழுத்தினையும் கவனத்திற் கொண்டு அகராதிகள் அமைக்கப்பட்டன. அதன் படி இந்தக் பகுதியில் அகராதி ஒழுங்கில் எவ்வாறு சொற்களை அமைப்பது என்று நோக்குவோம்.
அகராதியானது பின்வரும் ஒழுங்கில் அமைக்கப்படுகின்றது.

அ) உயிர் எழுத்துகள் –

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள

ஆ) ஆய்த எழுத்து

இ) உயிர் மெய் எழுத்துகள்
க ங ச ஞ ட ண த ந ப
கா ஙா சா ஞா டா ணா தா நா பா
கி ஙி சி ஞி டி ணி தி நி பி
ஈ) மெய்யெழுத்துகள் –
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்

மேற்படி கண்ட அமைப்பின் அடிப்படையிலேயே அகராதியில் காணப்படும் சொற்கள் அமைக்கப்பட்டுள்ளன.
என்ற அமைப்பின் அடிப்படையிலேயே அகராதியில் காணப்படும் சொற்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உதாரணம் –
அம்மா , அப்பா, அக்கா, அண்ணா, அத்தை, அண்ணி
மேற்படி கொடுக்கப்பட்ட சொற்களை அகர வரிசைப்படி எழுதும் போது முதல் எழுத்தான “அ” என்பதை மட்டும் கொண்டு பார்க்காமல் இரண்டாம், மூன்றாம் எழுத்துக்களையும் தொடர்ந்து இடம்பெறும் எழுத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன் படி உயிர் எழுத்துக்களில் வரிசை முறையையும், மெய்யெழுத்துக்களின் வரிசைமுறையும் மிக அவசியமாகும்.
அக்கா, அண்ணா, அண்ணி, அத்தை, அப்பா, அம்மா
இப்போது இச் சொல்லமைப்பியியல்; இவ்வாறு இடம் பெற்றமைக்கான காரணத்தை நோக்குவோம். அதே நேரம் அகர வரிசையை ஒழுங்குப்படுத்த உயிரெழுத்து, மெய் எழுத்து வரிசைமுறை மிக முக்கியமானதாகும்;.
தமிழ் அரிச்சுவடி

தமிழ் அகராதிகள் உயிர் எழுத்துக்களில் ஆரம்;பித்து ஆய்தம், உயிர் மெய், மெய் என்ற அமைப்பில் முடிவடையும்.
அதுபோலவே இங்கு கொடுக்கப்பட்ட சொற்றொகுதி அம்மா , அப்பா, அக்கா, அண்ணா, அத்தை, அண்ணி என் ஒழுங்கற்ற முறையில் உள்ளது. இச் சொற்களை மேலே உள்ள தமிழ் அரிச்சுவடி ஒழுங்கு முறையின் அடிப்படையில் அமைக்கும் போது முதலாவது உயிர் எழுத்து இரண்டாவது ஆய்த எழுத்து மூன்றாவது உயிர் மெய்யெழுத்து இறுதியாக மெய்யெழுத்து என்ற அமைப்பில் தொடரும்.
மேற்படி கொடுக்கப்பட்ட உதாரணத்தில் முதலாவது “அ” என்ற உயிர் எழுத்து வந்துள்ளது. ஆனால் இரண்டாவது எழுத்துகளான உயிர் மெய்யெழுத்துகள் ஒன்றேனும் இடம்பெறவில்லை அதனால், உயிர்மெய்யெழுத்துக்களை கவனத்தில் கொள்ளவேண்டியதில்லை.
அதன் படி முதல் சொல்லாக இடம் பெற வேண்டியது “அக்கா” காரணம் “அ” என்ற உயிர் எழுத்தைத் தொடர்;ந்து “க்” என்ற மெய்யெழுத்து இடம்பெற்றுள்ளது. இதனால் இச் முதலாவதாக வந்துள்ளது.
இரண்டாவது சொல் “அண்ணா” இச் சொல் மெய்யெழுத்து வரிசையில் அடுத்து இடம்பெறுவதாக உள்ளது.
மூன்றாலது இடம் பெறுவது “அண்ணி” இங்கே அண்ணா, அண்ணி என்ற இரண்டு சொற்களிலும் இரண்டாவது எழுத்து “ண்” ஆக உள்ளதால், மூன்றாவது எழுத்தைக் பார்;க்க வேண்டும். இதில் “ண்” என்ற எழுத்தினைத் தொடர்ந்து ணகர வரிசை வருக்க எழுத்துகளான “ணா” என்ற எழுத்தினைத் தொடர்ந்து “ணி” என்ற எழுத்து வருவதால் “அண்ணி” என்ற சொல் நான்காவது இடம் பெற்றது.
ஐந்தாவது “அத்தை” மெய்யெழுத்துகளில் ணகர வரிசையினைத் தொடர்ந்து அடுத்து இடம் பெற்றிருப்பது தகர வரிசை இடம் பெற்றுள்ளது. இதனால் இச் சொல் ஐந்தாவதாவதாக இடம் பெற்றுள்ளது.
ஆறாவது “அப்பா” தகரத்தின் பின் இங்கு இடம்பெற்ற சொல்லில் பகரம் இடம் பெறும் காரணத்தால் இச் சொல் ஆறாவது.
ஏழாவது “அம்மா” இச் சொற்கூட்டத்தில் மெய்யெழுத்து வரிசையில் கடைசியாக இடம் பெற்றிருப்பது, மகர வரிசை என்பதால் இச் சொல் ஏழாவதாக இடம் பெற்றது.
மேலும் சில உதாரணங்களைப் பார்ப்போம்
வயோதிபன், அரசன், மனைவி, கடவுள், வியாபாரி, தபுதாரன் என்ற சொற்களின் அகர வரிசைப்படி அமைக்கும் போது
அரசன், கடவுள், தபுதாரன், மனைவி, வயோதிபன், வியாபாரி என்ற ஒழுங்கமைப்பில் வரும் இங்கு உயிரெழுத்து முதல் வந்து ஏனைய உயிர் மெய்யெழுத்துக்களின் ஒழுங்குமுறையில் வந்துள்ளது.
இவ்வாறே அகராதி ஒழுங்குமுறையான் சொற்கள் அமைக்கப்படுகின்றன.

  1. அகராதி ஒழுங்கில் அமைந்த சொற்றொகுதி
    அ) தண்ணீர், தட்டு, தம்பி, தச்சன்
    ஆ) பட்டு, கட்டம், நேற்று, இலை
    இ) கப்பம், கம்பி, கற்பனை, காற்று
    ஈ) ஆடு, ஊஞ்சல், ஒன்று, அப்பன்
FOUNDER DIRECTOR

Agaram Dhines

About Me

Name: Th. Dineshkumar (Agaram Dhines)
Profession: Tamil Language Teacher | YouTuber | Online Tutor

I am a passionate and experienced Tamil language and literature teacher with over 8 years of teaching experience. I currently serve as a Sri Lanka Teacher Service (SLTS II/2) educator, guiding students from Grades 6 to 13.

Academic Qualifications:

  • Bachelor of Arts (Hons) in Tamil & Tamil Language Teaching
  • Diploma in Artificial Intelligence and Graphic Designing

Professional Highlights:

  • I run a popular educational YouTube channel named “Agaram Dhines”, where I create and share free Tamil lessons.
  • I teach students not only from Sri Lanka, but also Tamil language enthusiasts from around the world.
  • I offer personalized online classes, supporting both school curriculum and Tamil language skill development.

My Services Include:

  • Curriculum-based teaching for Grades 6 to 13
  • Special focus on literature, grammar, and writing skills
  • Model exams, practice question papers, and video-based lessons
  • Speaking and writing skill development for non-native Tamil learners

Loading

Share: 

No comments yet! You be the first to comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *