ணகர, னகர வேறுபாடு
அணங்கு – தெய்வப் பெண்
அனங்கு – மன்மதன்
அனல் – தாடி
அனல் – உஷ்ணம்
அணி – அலங்காரம்
அனி – நெற்பொரி
அண்மை – சமீபம்
அன்மை – தீமை
அண்ணம் – மேல்வாய்
அன்னம் – ஒரு பறவை
அரண் – கோட்டை
அரன் – சிவன்
ஆணி – இரும்பாணி
ஆனி – ஒரு மாதம்
ஆண் – ஆண்
ஆன் – இடபம்
உண்ணல் – சாப்பிடுதல்
உன்னல் – நினைத்தல்
ஊண் – இரை
ஊன் – தசை
எண் – இலக்கம்
என் – என்னுடைய
எண்பது – எண்
என்பது – எனப்படுவது
ஏணம் – மான்
ஏனம் – பன்றி
கணம் – கூட்டம்
கனம் – பாரம்
கணி – கணிப்பிடு
கனி – பழம்
கண்ணி – அரும்பு
கன்னி – குமரி
காணல் – குறித்தல்
காணல் – கடற்கரை சோலை
குணி – ஊமை
குனி – குனிதல்
கோண் – வளைவு
கோன் – அரசன்
தண் – குளிர்ச்சி
தன் – தனது
திணை – ஒழுக்கம்
தினை – பயிர்
நாணம் – வெட்கம்
நானம் – குளித்தல்
நாண் – கயிறு
நான் – யான்
பரண் – பரண்
பரன் – சிவன்
பாணம் – அம்பு
பானம் – பருகும் திரவம்
பூணை – முல்லை நிலம்
பூனை – மிருகம்
மணம் – திருமணம்
மனம் – உள்ளம்
மாணவன் – சீடன்
மானவன் – அரசன்
யாண் – அழகு
யான் – நான்
வண்ணம் – அழகு
வன்னம் – வர்ணம்
ரகர, றகர வேறுபாடுகள்
அரம் – ஆயுதம்
அறம் – தருமம்
அரவு – பாம்பு
அறவு – நாசம்
அரி – சிங்கம்
அறி – உணர்
அருந்து – உண்
அறுந்து – துண்டுபட்டு
அரை – பாதி
அறை – இல்லத்தில் ஒரு பகுதி
அலரி – ஒருவகைப் பூ
அலறி – கதரி
இரத்தல் – பிச்சை எடுத்தல்
இறத்தல் – சாதல்
இருப்பு – இருப்பிடம்
இறுப்பு – கடன் செலுத்துகை
இரவு – இராத்திரி
இறவு – தேன் கூடு
இரை – உணவு
இறை – கடவுள்
ஈரல் – ஓர் உள்ளுறுப்பு
ஈறல் – துக்கம்
உரப்பு – கடினம்
உறப்பு – செறிவு
உரை – பேச்சு
உறை – படைக்கூடு
ஏரி – நீர் நிலை
ஏறி – வீசியெறி
கரி – அடுப்புக் கரி
கறி – மரக் கறி
கரை – கடற் கரை
கறை – காசு
கீரி – விலங்கு
கீறி – மாயம்
குரவை – கூத்து
குறவை – வரால் மீன்
குரைத்தல் – குலைத்தல்
குறைத்தல் – சுருக்குதல்
கூரை – புல் வகை
கூறை – ஆடை
கோரை – புல்வகை
கோறை – பழுது
சிரை – மயிர் கழி
சிறை – சிறைச்சாலை
சேரி – ஊர்
சேறி – மீன் வகை
திரம் – உறுதி
திறம் – வலிமை
துரை – தலைவன்
துறை – கடற்கரை
நரை – வெளுத்த மயிர்
நறை – தேன் கள்
பரவை – கடல்
பறவை – புள்
பரி – குதிரை
பறி – பிடுங்கு
பரை – பார்வதி
பறை – முரசு
பாரை – கட்டப் பாரை
பாறை – குன்று
புரம் – ஊர்
புறம் – பக்கம்
மரம் – விருட்சம்
மறம் – வீரம்
மரை – மழை
மறை – வேதம்
வருத்தல் – துன்பப்படுத்தல்
வறுத்தல் – வறட்டுதல்
விரகு – உபாயம்
விறகு – வலி
விரல் – கை விரல்
விறல் – எரிக்கும் கட்டை
விரை – வாசனை
விறை – மரத்துப் போ
லகர, ழகர, ளகர வேறுபாடுகள்
அகலம் – விரிவு
அகளம் – தாழி
அகல் – நீங்கு
அகழ் – தோண்டு
அலகு – பறவை மூக்கு
அழகு – வனப்பு
அளகு – பறவைகளின் பெண்
அலி – பேடி
அழி – கெடு
அளி – அருள்
அழிதல் – கெடுத்தல்
அளிதல் – அறக் கனிதல்
அலை – நீர்த் திரை
அழை – அழைத்தல்
அளை – குழை
அவல் – குளம்
அவள் – அப்பெண்
ஆலம் – பாம்பின் விசம்
ஆழம் – தாழ்வு
ஆலி – அமுதம்
ஆழி – கடல்
ஆளி – சிங்கம்
ஆல் – ஆலமரம்
ஆழ் – தாழு
ஆள் – ஆளுதல்
இலி – இல்லாதவன்
இழி – இறங்கு
இளி – சிரிப்பு
இலை – தழை
இழை – ஆபரணம்
இளை – இளைப்படை
உலவு – உலாவு
உழவு – பயிர்த்தொழில்
உளவு – வேவு
உலை – வருந்து
உழை – துன்புறு
உளை – அழை
ஊழி – யுக முடிவு
ஊளி – பசி
ஒலி – சத்தம்
ஒழி – கொல்
ஒளி – வெளிச்சம்
கலகம் – போர்
கழகம் – கல்லூரி
களகம் – பெச்சாளி
கலன் – ஆபரணம்
களன் – இடம்
கலி – கடல்
கழி – மிகுதி
களி – சந்தோசம்
காலம் – பொழுது
காழம் – ஓர் வகை உடை
காளம் – எட்டி மரம்
கிலி – பயம்
கிழி – கிழித்தல்
கிளி – பறவை
குலம் – சாதி
குளம் – தடாகம்
குழித்தல் – குழியாக்குதல்
குளித்தல் – நீராடுதல்
கூலம் – கடற் கரை
கூழம் – எள்
கூளம் – வைக்கோள் தூள்
கேழ் – உவமை
கேள் – உறவு
கோலம் – அழகு
கோழம் – ஓர் வகைப் பாஷாணம்
கோளம் – உண்டை
சுழிதல் – சுழிபோல் வளைதல்
சுளிதல் – சினத்தல்
சூல் – கர்ப்பம்
சூழ்தல் – சுற்றல்
சூள்தல் – ஆணையிடுதல்
தலம் – இடம்
தழம் – தயிலம்
தளம் – தள வரிசை
தாலம் – பனை
தாழம் – அமைதி
தாளம் – ஓர் வாத்தியம்
தொலை – தூரம்
தொளை – துவாரம்
தோலி – பழத்தோல்
தோழி – நண்பி
தோளி – ஒருவகை சிவிகை
நால் – நான்கு
நாழ் – செருக்கு
நாள் – காலம்
பலை – பழம்
பழை – கள்
பளை – விலங்கின் வளை
பீழை – துன்பம்
பீளை – கண் மலர்
புகல் – தஞ்சம்
புகழ் – கீர்த்தி
புலை – புலால்
புழை – துளை
புளை – அலங்கரிப்படு
போல் – மூங்கில்
போழ் – பிள
மலை – குன்று
மழை – மழை
முலை – கொங்கை
முழை – அகப்பை
முளை – முளைத்தல்
வலம் – வலது பக்கம்
வளம் – அழகு
வலி – வல்லமை
வழி – பாதை
வளி – காற்று
வலு – பலம்
வழு – பிழை
வளு – இளமை
வாலி – இந்திரன் மகன் வாலி
வாழி – வாழ்க
வாளி – அம்பு
விலா – பழு
விழா – விழவு
விளா – விளா மரம்
விழி – கண்
விளி – அழை
வேலம் – தோட்;டம்
வேழம் – யானை
வேளம் – வாசத் தலம்
வேலை – தொழில்
வேளை – காலம்

FOUNDER DIRECTOR
Agaram Dhines
About Me
Name: Th. Dineshkumar (Agaram Dhines)
Profession: Tamil Language Teacher | YouTuber | Online Tutor
I am a passionate and experienced Tamil language and literature teacher with over 8 years of teaching experience. I currently serve as a Sri Lanka Teacher Service (SLTS II/2) educator, guiding students from Grades 6 to 13.
Academic Qualifications:
- Bachelor of Arts (Hons) in Tamil & Tamil Language Teaching
- Diploma in Artificial Intelligence and Graphic Designing
Professional Highlights:
- I run a popular educational YouTube channel named “Agaram Dhines”, where I create and share free Tamil lessons.
- I teach students not only from Sri Lanka, but also Tamil language enthusiasts from around the world.
- I offer personalized online classes, supporting both school curriculum and Tamil language skill development.
My Services Include:
- Curriculum-based teaching for Grades 6 to 13
- Special focus on literature, grammar, and writing skills
- Model exams, practice question papers, and video-based lessons
- Speaking and writing skill development for non-native Tamil learners
![]()
