02. சந்தி பிரிக்கும் விதிமுறைகள்
1. உயிர் மெய் பிரிப்பு
2. ங், ந், ஞ் ஆகிய எழுத்துகள் – ம் ஆதல்
3. வல்லின ஒற்றுகள் உகரம் பெறல்
4. அரையுயிர் – ய், வ் (யகர, வகர வருக்க எழுத்துகள் உயிர் எழுத்தாதல்)
5. ள் – ண் – ட் இனவெழுத்தாக தொழிற்படல்
6. ல் – ன் – ற் இனவெழுத்தாக தொழிற்படல்
7. ட் ற் – தகரமாக மாற்றமடைதல்
8. விகாரம் – கெடுதல் , தோன்றல், திரிதல்
9. மெய் உயிராதல் (அரிதாக இடம் பெறும்)
10. உயிர் மெய்யாதல் (அரிதாக இடம் பெறும்)
11. ண, ன கரங்கள் – நகரமாகும்
03. வாக்கிய வகைகள்
சொற்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமறைக்கேற்ப ஒன்றுடன் ஒன்று அமைப்பு ரீதியாக இணைந்து ஒரு முற்றுப்பொருளைத் தருமாயின் அது வாக்கியம் எனப்படும்.
வாக்கியங்களை அமைப்பு அடிப்படையில்
தனி வாக்கியம், கூட்டு வாக்கியம், கலப்பு வாக்கியம்
தனிவாக்கியம்
தனி வாக்கியம் எனப்படுவது ஓர் எழுவாயினையும் ஒரு பயனிலையையும் கொண்டு அமைந்த வாக்கியங்கள் தனிவாக்கியங்கள் எனப்படும்.
1. நான் சோறு சாப்பிட்டேன்
2. மாலா வீட்டுக்கு வந்தாள்
மேலே உள்ள இரண்டு வாக்கியங்களில் ஓர் எழுவாயும் ஒரு பயனிலையையும் வந்துள்ளது.