புலவர் ம.பார்வதிநாதசிவம்
ம. பார்வதிநாதசிவம் (14 சனவரி 1936 – 5 மார்ச் 2013) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், பத்திரிகையாளரும், தமிழறிஞரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டக் கற்கையை மேற்கொண்டவர். எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை யாத்தவர். புலவரின் பேரனார் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை, பெரிய தந்தையார் புலவர் ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை போன்ற ஆளுமைகளின் வழிகாட்டலில் பயணித்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
பார்வதிநாதசிவம் யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளையின் மகன் குருகவி என அழைக்கப்படும் ம. வே. மகாலிங்கசிவம் என்பவருக்குப் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை வீமன்காமம் மகா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். கவிஞர் கதிரேசம் பிள்ளை, புலவர் சைவப் பெரியார் சிவபாதசுந்தரம், ரி. சண்முகசுந்தரம் போன்றவர்களிடம் தமிழ் கற்றார். பின்னர் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1957 ஆம் ஆண்டில் புலவர் பட்டம் பெற்றார். அங்கு கல்வி கற்கும் காலங்களில் பாவேந்தர் பாரதிதாசனுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கவித்துவம் பற்றிக் கற்றார்[
தலைப்பு – கவிஞன்
கருணையே வடிவம் ஆவான்
கற்பனைச் சுரங்கம் ஆவான்
தருமமே போற்றிக் கொள்வான்
தகாதன ஏற்றுக் கொள்ளான்
வருவதே இடரென்றாலும்
வாய்மையே உரைத்து நிற்பான்
பெருமையே தருவ செய்வான்
பிழை செய்யான் பிழைத்தற்காக
தமிழுக்குத் தொண்டு செய்வோர்
தங்களைத் தொழுது நிற்பான்
தமிழுக்குக் கேடு சூழ்வோர்
தமைப்பகை ஆகக் கொள்வான்
இமிழ்திரை உலகில் எந்தப்
பகுதியில் இடர் நேர்ந்தாலும்
தமதுயிர் கொடுப்போர் ஆற்றல்
தான்மிகப் பாடி நிற்பான்
திங்களின் அழகென்றாலும்
திகழ்மலர் அழகென்றாலும்
செங்கதிர் அழகென்றாலும்
செழும்புனல் அழகென்றாலும்
இங்கலை கவிதை என்னும்
எழிலுறு வடிவில் வைப்பான்
எங்குமே நன்மை வாழ
இதயத்தால் பாடல் செய்வான்
உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துகளை சொடுக்குக - கவிதை விளையாட்டு
🌺 தமிழ் எழுத்துகளின் கவிதைச் சோலை 🌺
உயிர் எழுத்துகள் (12)
மெய் எழுத்துகள் (18)
உயிர் அல்லது மெய் எழுத்தைச் சொடுக்கி, அதன் கவிதையைப் படிக்கவும்! 📚
✨ உங்கள் பெயருக்கான ஊக்கமூட்டும் கவிதை ✨
மேலே உள்ள கட்டத்தில் உங்கள் பெயரை உள்ளிட்டு, 'கவிதை காட்டு' பொத்தானைச் சொடுக்கவும். உங்கள் பெயரைக் கொண்ட ஒரு ஊக்கமூட்டும் கவிதை இங்கே தோன்றும்!
