Homeதரம் 11 வினா விடை (ONLINE)2016 க.பொ.த (சா/த) பரீட்சை பல்தேர்வு வினாக்கள் (1 – 40)

2016 க.பொ.த (சா/த) பரீட்சை பல்தேர்வு வினாக்கள் (1 – 40)

AGARAM DHINES ONLINE ACADAMY – ZOOM CLASS TIME TABLE (GRADE 06 – 11)

2016 G.C.E. (O/L) தமிழ் பல்தேர்வு வினாக்கள்

2016 க.பொ.த (சா/த) பரீட்சை பல்தேர்வு வினாக்கள் (1 – 40)

எமது AGARAMDHINES.LK என்ற எம் பக்கத்தினை சேமித்து, உங்கள் உலாவியில் திறந்தால், விடையைத் தெரிவு செய்யும் போது சரியான விடை பச்சை நிறத்திலும், பிழையான விடை சிவப்பு நிறத்திலும் காண்பிக்கப்படும். மேலும், ஒவ்வொரு விடைக்கும் சரியான காரண விளக்கங்களும் வழங்கப்படும்.

தடித்த எழுத்தில் அமைந்த சொல் பற்றிய வினா (1 – 5)

தடித்த எழுத்தில் அமைந்த சொல் பற்றிய வினாவுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க

1.
‘ தெண்ணீர்க் கயத்துட் சிறுமீன் ’ – இங்கு கயம் என்பது
  • 1) யானை
  • 2) குளம்
  • 3) கயல்மீன்
  • 4) குடம்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
2.
‘ வெங்கட் பிறைக்கும் கரும்பிறைக்கும் மெலிந்து ’ – இங்கு கரும்பிறை என்பது
  • 1) அரிய பிறை
  • 2) கரிய பிறை
  • 3) மன்மதன்
  • 4) பிறைசூடி
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
3.
‘ பேதமை என்பது ஒன்று யாதெனில் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் ” – பேதமை என்பதன் எதிர்கருத்து
  • 1) அறிவுடைமை
  • 2) அறியாமை
  • 3) போதாமை
  • 4) பெருவடிவு
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
4.
தூலவடிவில் நின்றும் மறைந்த இலட்சிய புரடர்களை … ’ தூலவடிவு என்பதன் எதிர்கருத்து
  • 1) தூயவடிவு
  • 2) சூக்குமவடிவு
  • 3) அசுத்தவடிவு
  • 4) பெருவடிவு
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
5.
‘ விசேஷ மூன்றுங் குலாவுள்ள நாடு ” – விசேஷ மூன்றும் என்பதனுள் அடங்காதது எது ?
  • 1) நித்தியம்
  • 2) அநித்தியம்
  • 3) நைமித்தியம்
  • 4) காமியம்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.

பொது வினாக்கள் (6 – 18)

பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.

6.
‘ கணிப்பொறி எத்தனை பக்கம், எத்தனை வரிகள், எத்தனை பராக்கள் என்று கச்சிதமாகச் சொல்லிவிடும் ” – பராக்கள் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல்
  • 1) அடிகள்
  • 2) பந்திகள்
  • 3) விடயங்கள்
  • 4) இடைவெளிகள்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
7.
பொருத்தமற்ற சொற்களின் இணைப்பு
  • 1) செய்யுள் – அடி
  • 2) கட்டுரை – பந்தி
  • 3) சொல் – எழுத்து
  • 4) எழுத்து – நிறுத்தக்குறி
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
8.
சினிமாத் துறையில் எடிடிங் (Editing) என்பது
  • 1) ஒலிப்பதிவு
  • 2) படத்தொகுப்பு
  • 3) ஒளிப்பதிவு
  • 4) படவிநியோகம்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
9.
குதிரை, தானியப் பொடி, பெரிய என்னும் பொருள் தரும் சொல்
  • 1) பரி
  • 2) கா
  • 3) திரு
  • 4) மா
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
10.
பெண் மான் பிணை என்பது போல, பெண் யானையைக் குறிக்கும் சொல்
  • 1) கரி
  • 2) பிடி
  • 3) களிறு
  • 4) கஜம்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
11.
நியாயம் கேட்டல் என்னும் பொருள் தரும் மரபுத்தொடர்
  • 1) தட்டிப் பேசுதல்
  • 2) தட்டிப் பார்த்தல்
  • 3) தட்டிக்கேட்டல்
  • 4) தட்டிக் கொடுத்தல்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
12.
‘ எப்படியும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று அவன் ஒற்றைக்காலில் நிற்கிறான் ’ – ‘ ஒற்றைக்காலில் நிற்றல் ’ என்ற மரபுத்தொடரின் பொருள்
  • 1) பலமற்று நிற்றல்
  • 2) பிடிவாதமாக நிற்றல்
  • 3) உறுதியற்று நிற்றல்
  • 4) ஆசைப்படுதல்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
13.
சபையில் சொல்லத்தகாத சொல்லைத் தவிர்த்து வேறு வகையில் சொல்வது
  • 1) மற்றொன்று விரித்தல்
  • 2) மறைமொழி
  • 3) ஒம்படைக் கிளவி
  • 4) இடக்கரடக்கல்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
14.
வீண் செலவு செய்பவன்
  • 1) உதவாக்கரை
  • 2) கருமி
  • 3) ஊதாரி
  • 4) பேதை
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
15.
இளமைக் காலத்திலேயே ஒழுக்கமாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும், வயதான பின் திருத்த முடியாது என்பதை வலியுறுத்தும் பழமொழி
  • 1) இளமையிற் கல்வி சிலையில் எழுத்து
  • 2) அஞ்சிலே வளையாதது ஐம்பதில் வளையுமா ?
  • 3) ஆறிலும் சாவு நூறிலும் சாவு
  • 4) தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
16.
ஈகைக் குணத்தை வலியுறுத்தும் பழமொழி
  • 1) இரக்கப் போனாலும் சிறக்கப் போ
  • 2) கெட்டாலும் செட்டி, கிழிந்தாலும் பட்டு
  • 3) இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை
  • 4) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
17.
“ ஆற்றிலே கரைத்த புளி போல ’ என்ற உவமைத் தொடருக்கு நிகரான பிறிதொரு உவமைத் தொடர்
  • 1) அணை கடந்த வெள்ளம் போல
  • 2) காட்டில் எறிந்த நிலாப் போல
  • 3) ஆனை வாயிற் கரும்பு போல
  • 4) ஆனை உண்ட விளாம்பழம் போல
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
18.
வாழையடி வாழையாக ’ என்ற அருஞ்சொற்றொடரால் உணர்த்தப்படுவது
  • 1) நன்றியுணர்வு
  • 2) மாற்றமின்மை
  • 3) பாரம்பரியத் தொடர்ச்சி
  • 4) உபகாரத் தன்மை
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.

சொல்லாக்க வினாக்கள் (19 – 20)

19.
‘ எந்தக் காரிருளையும் கிழித்துக் கொண்டு குடுகுடுவென நடக்கும் மனோதைரியம் … ” குடுகுடு என்பது
  • 1) அடுக்குத்தொடர்
  • 2) இணைமொழி
  • 3) அடுக்கிடுக்குத்தொடர்
  • 4) இரட்டைக் கிளவி
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
20.
‘ நாத் தோம் இல் உரை பதறக் கதும் என உற்றெழுந்து … ” – இங்கு கதும் எனும் ஒலிக்குறிப்புச் சொல் உணர்த்தும் பொருள்
  • 1) விரைவு
  • 2) நிதானம்
  • 3) துக்கம்
  • 4) பயம்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.

இலக்கண வினாக்கள் (21 – 30)

பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் மிகச் சரியான விடையைத் தெரிவுசெய்க.

21.
பின்வருவனவற்றுள் பகாபதம்
  • 1) ஊரன்
  • 2) அழகு
  • 3) வாட்டம்
  • 4) பாடல்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
22.
உடன்நிலை மெய்மயக்கம் இடம்பெற்ற சொல்
  • 1) கழுத்து
  • 2) பந்து
  • 3) காய்ந்து
  • 4) மஞ்சள்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
23.
பின்வருவனவற்றுள் பெயரடை
  • 1) வேகமாக
  • 2) வேகமாய்
  • 3) வேகமான
  • 4) வேகவேகமாய்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
24.
வேற்றுமைப் பொருளால் வேறுபட்டமையும் தொடர்
  • 1) என் புத்தகம்
  • 2) எனது நண்பன்
  • 3) மரவேர்
  • 4) மேற்கு வீதி
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
25.
இயல்பு புணர்ச்சி இடம்பெற்றமைந்தது
  • 1) கல்லெறிந்தான்
  • 2) சோறுண்டான்
  • 3) வேலெறிந்தான்
  • 4) சோற்றுருண்டை
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
26.
அவன் ஒழுங்காகப் படிக்கவில்லை.
அவன் பரீட்சையில் சித்தியடையவில்லை.
மேற்படி இரு வாக்கியங்களையும் இதே ஒழுங்கில் இணைப்பதற்குப் பொருத்தமான இணைப்பிடைச் சொல்
  • 1) எனினும்
  • 2) என்றாலும்
  • 3) எனவே
  • 4) இருப்பினும்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
27.
‘ கேண்மை செய்து இன்புற்றனெம் – இங்கு இன்புற்றனெம் என்பது
  • 1) படர்க்கை வினைமுற்று
  • 2) தன்மை வினைமுற்று
  • 3) முன்னிலை வினைமுற்று
  • 4) குறிப்பு வினைமுற்று
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
28.
அகராதி ஒழுங்கில் அமைந்த சொற்றொகுதி
  • 1) கீரி, குதிரை, கூடு, கொம்பு
  • 2) சேதி, பாதி, சாதி, நீதி
  • 3) ஆலை, காலை, வேலை, சாலை
  • 4) நாடு, நேர்மை, நன்மை, நிறம்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
29.
பொருத்தமற்ற உதாரணம் இடம் பெற்ற சொற்றொகுதியைத் தெரிவு செய்க.
  • 1) கூட்டுப்பெயர் : கடற்கரை, நூல் நிலையம், சமையலறை
  • 2) ஆக்கப்பெயர் : கூட்டாளி, சமூகவியல், மலர்ச்சி
  • 3) தொழிற்பெயர் : ஆடுதல், போகாமை, வந்தவன்
  • 4) மாற்றுப்பெயர் : அவன், நான், இது
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
30.
பொருத்தமற்ற உதாரணம் இடம் பெற்ற சொற்றொகுதியைத் தெரிவு செய்க.
  • 1) முற்றுவினை : வந்தவன், படிப்பான், சென்றேன்
  • 2) எச்சவினை : வந்து, படித்து, சென்று
  • 3) தன்வினை : படித்தான், குடித்தான், உதவினான்
  • 4) பிறவினை : படிப்பித்தான், ஊட்டினான், கண்டான்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.

கோடிட்ட இடத்தை நிரப்புதல் (31 – 34)

புள்ளிக் கோடிட்ட இடத்தை நிரப்புவதற்கு மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.

31.
நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் உணர்த்துவனவாய் அமையும் தொல்பொருட்கள் ……………………….. காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
  • 1) சுவடிகள் கூடத்தில்
  • 2) களஞ்சியசாலையில்
  • 3) நூதனசாலையில்
  • 4) திறைசேரியில்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
32.
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான அறிவித்தல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் பொதுவாக ……………………….. வெளியிடப்படுகின்றன.
  • 1) வர்த்தமானியில்
  • 2) சுற்றுநிரூபத்தில்
  • 3) புதினப்பத்திரிகையில்
  • 4) அறிக்கையில்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
33.
அகராதியைப் போலவே சொற்களை அகர வரிசையில் தொகுத்து அவற்றைப் பற்றிய முழுமையான விவரங்களைத் தரும் கருவி நூல் ………………………..
  • 1) இலக்கணம்
  • 2) தருக்கம்
  • 3) கலைக்களஞ்சியம்
  • 4) யாப்பிலக்கணம்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
34.
நூலாசிரியரால் அன்றி வேறொருவரால் வழங்கப்படும் சிறப்புரை ……………………….. எனப்படும்.
  • 1) நூன்முகம்
  • 2) முன்னுரை
  • 3) அணிந்துரை
  • 4) தொகுப்புரை
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.

வாக்கியத் திருத்தம் (35 – 36)

பொருத்தம் மிக்க வினையைத் தெரிவு செய்க.

35.
மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியரும் சண்டையில் ………………………..
  • 1) ஈடுபட்டனர்
  • 2) ஈடுபட்டார்கள்
  • 3) ஈடுபடுகிறார்கள்
  • 4) ஈடுபட்டார்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
36.
புதிய வரவு செலவுத் திட்டத்தை அமைச்சரவை ………………………..
  • 1) ஆராய்வார்கள்
  • 2) ஆராய்ந்தார்கள்
  • 3) ஆராயவுள்ளது
  • 4) ஆராய்ந்தார்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.

செய்யுள் வினாக்கள் (37 – 39)

பின்வரும் செய்யுள் பகுதியை வாசித்து, அதற்கான விடையைத் தெரிவு செய்க.

இரவினில் உலகினை மறைத்து வைத்திருந்த இருளினைத் துரத்தியே பிடிப்பது போல
தாமிரத் தட்டம் அது என பனிப்பகையினைச் சாடி
திருஉறும் உலகினர் மகிழ்வுற வந்து
செங்கதிரவன் உதயம் செய்கின்றானே.
கிரணங்கள் என்னும் பல கரங்களை நீட்டி

37.
இரவில் உலகத்தை மறைத்து வைத்திருந்தது எது?
  • 1) தாமிரத் தட்டம்
  • 2) பனிப்படலம்
  • 3) இருள்
  • 4) எரித்திரள்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
38.
சூரியனது கரங்களாகவும் சூரியனது பகையாகவும் உருவகிக்கப்படுவன, முறையே
  • 1) இருள், உலகு
  • 2) கிரணங்கள், பனி
  • 3) எரித்திரள், பனி
  • 4) இருள், கிரணங்கள்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.
39.
இப்பாடலின் கருத்துக்குப் பொருந்தாத கூற்று
  • 1) உதயசூரியன் தாமிரத் தரட்டம் போலத் தோற்றமளிக்கின்றது.
  • 2) உதய சூரியன் நெப்புத் திரள் போதம் தோற்றமளிக்கின்றது.
  • 3) சூரியன் உலகத்து இருளைப் பிடித்து வைத்திருகின்றது.
  • 4) சூரிய உதயத்தால் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.

வாக்கிய ஒழுங்கு (40)

கீழே உள்ள வாக்கியங்களை ஒழுங்குபடுத்தி அர்த்தமுள்ள பந்தியைக் கொடுக்கும் மிகச் சரியான ஒழுங்கைத் தெரிவு செய்க.

அ.

மனிதர்கள் எந்தவொரு வேலையையும் செவ்வனே செய்வதற்குப் பயன்படும் அறிவே **அறிதிறன்** ஆகும்.

ஆ.

இன்று ஒருவருக்கு வாழ்க்கையில் வெற்றிபெறச் சாதாரண அறிவு மாத்திரம் போதாது.

இ.

முதலாவது செயற்திறனைப் பற்றியது, இரண்டாவது அறிதிறனைப் பற்றியது.

ஈ.

இத்தகைய அறிதிறன் உள்ளவர்களே வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

உ.

பேச்சின் போதும் செயலின் போதும் வெளிப்படுவது வேறாகவும், உள்ளீடாகக் காணப்படுவது வேறாகவும் இருக்கின்றது.
40.
சரியான ஒழுங்கு
  • 1) ஆ, உ, அ, இ, ஈ
  • 2) ஆ, உ, இ, அ, ஈ
  • 3) உ, இ, அ, ஆ, ஈ
  • 4) இ, உ, அ, ஈ, ஆ
விடையைத் தெரிவு செய்து சரியான விளக்கத்தைப் பார்க்கவும்.

— வினாத்தாள் முடிவு —

Loading

Share: 

Comments

  • October 22, 2025

    The questions given above were easy and simple to do, so I would like to thank them for creating this.☺️

    Reply

  • Harish
    October 23, 2025

    These questions was easy & simple and thank you sir

    Reply

  • S.M.Aqeel
    October 23, 2025

    Romba thanks sir mihavum pirayosanamaha irunthathu

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *