Homeதமிழ் மொழிவளம்தொடர்மொழிக்கு ஒரு மொழி

தொடர்மொழிக்கு ஒரு மொழி

அகராதி – அகர வரிசைப்படிசொற்களுக்குப் பொருள் தருவது
அகதி – அனைத்து உடைமைகளையும் இழந்தவன்
அகழி – கோட்டையை சுற்றி அமைந்த நீர்நிலை
அகால மரணம் – வயோதபம் அடையாமல், எதிர்பாராமல் இறத்தல்.
அங்கதம் – வெளிப்படையாக புகழ்ந்தும் மறைபொருளில் இகழ்ந்தும் கூறுவது
அசகாயசூரன் – யார் துணையுமின்றி தானே தனியாக நின்று பகைவரை வெல்லும் ஆற்றல் படைத்தவன்.
அஞ்ஞாதவாசம் – பிறர் தம்மை இன்னாரென்று அறியாதவாறு மாறுவேடம் பூண்டு மக்கள் மத்தியில் வசித்தல்.
அடிமை – சுதந்திரமற்று வாழ்பவன்
அடைக்கலம் – ஒருவரை அல்லது ஒரு பொருளை பாதுகாத்துத் தரும்படி ஒருவரிடம் ஒப்படைப்பது.
அடையாள அட்டை – குறிப்பிட்ட நபர் இவர்தான் என்பதை நிழற்படத்துடன் காணப்படும் அட்டை
அட்டவதாணி – ஒரே நேரத்தில் எட்டு விடயங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன்.
அட்டில் – உணவு வகைகளை ஆக்கும் இடம்
அணிந்துறை – நூலுக்கு நூலாசிரியர் தவிர்ந்த இன்னொருவரால் வழங்கப்படும் உரை.
அணுசக்தி – அணுவின் மையமான கரு பிளக்கப்படும் போது வெளிப்படும் சக்தி
அதிதி – ஒரு நிகழ்ச்சிக்கு விசேடமாக அழைக்கப்படுபவர்.
அத்திவாரம் – கட்டிடங்களுக்கு ஆதாராமாக கட்டப்படுவது.
அநாதை – தாய் தந்தையை இழந்தவன்
அநுதாபம் – ஒருவர் படுந் துன்பத்தைப் பார்த்து அல்லது கேட்டு தாமும் கவலைப்படல்
அநுபந்தம் – ஒரு நூலின் பின்னே சேர்க்கப்படுவது (பின்னிணைப்பு)
அந்தப்புரம் – அரண்மனையில் பெண்கள் தங்கும் இடம்
அந்தாதி – ஒரு செய்யுளின் அந்தம் அடுத்த செய்யுளின் ஆதியாக வரத்தொடுப்பது.
அமங்கலி – கணவனை இழந்தப் பெண்
அம்பலம் – பிரயானிகள் எவ்வித கொடுப்பனவும் இன்றி தங்கும் இடம்
அவிசு – வேள்வியில் தேவருக்கு சமைக்கும் உணவு ஃ உப்பின்றி சமைத்த பச்சை அரிசி சாதம்
அரங்கேற்றம் — அறிஞர் முன்னிலையில் நூலையோ, கலை நிகழ்ச்சியையோ செய்தல்.
அரும்பொருட்சாலை – பண்டு தொட்டு இன்று வரையிலான நூதன பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும் இடம்.
அருள்பத்திரம் – அரசன், ஒருவனது சேவகம், கைங்கர்யம் முதலியவைகளை வியந்து கொண்டாடி அவனுக்கு கிராமம் முதலியவற்றை கொடுத்ததற்கு சாதனமாக எழுதிக் கொடுக்கும் பத்திரம்.
அலி – ஆணோ, பெண்ணோ அல்லாதவர்.
அல்லங்காடி – மாலையில் அல்லது இரவில் கூடும் சந்தை.
அழைப்பாணை – குறித்த ஒரு தினத்தில் நீதிமன்றத்திற்கு சமூனமளிக்கும்படி ஒருவருக்கு நீதிபதியால் விடுக்கப்படும் அதிகாரபூர்வமா கட்டளை.
அறம்பாடுதல் – பிறருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியனவாக சொற்களையும் சொற்றொடர்களையும் சேர்த்து கவிபாடல்.
அனுபந்தம் – ஒரு நூலில் இறுதியில் சேர்க்கப்படும் பகுதி
ஆகுதி – வேள்வியியல் மந்திரப்பூர்வமாகச் செய்யப்படும் ஓமம்
ஆச்சிரமம் – முனிவர்கள் வாழுமிடம்
ஆட்டுக்கல் – அரிசி முதலியவற்றை ஆட்டி அரைக்கும் கல்
ஆணைக்குழு – நிறுவனங்களில் ஏற்படும் ஒழுங்கீனங்கள் மற்றும் அசாம்பாவிதங்களை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் குழு
ஆதனம் – ஒருவருக்குரிய சொத்துக்கள்
ஆதீனம் – சமயப்பணி செய்யும் இடம்
ஆதுலர்சாலை – வறியவர்க்கும், அங்கவீனர்களுக்கும், முதியோருக்கும் உண்டியும், உறையுளும் அளித்து ஆதரிக்கும் இடம்.
ஆத்திகன் – கடவுள் இருக்கிறார் என நம்புபவன்
ஆய்வுரை (விமரிசனம்) – ஒன்றின் குறைநிறைகளை எடுத்துரைப்பது.
ஆவணம் – நிலத்தின் உரிமை கொண்டாடுவதற்குச் சான்றாக எழுத்துரவில் அமைந்த உறுதி
இடக்கரடக்கல் – சொல்லத் தகாத சொல்லை மறைத்து வேறோர் வகையில் சொல்லல்.
இடுகாடு – பிணங்களை அடக்கஞ் செய்யும் இடம்
இடைச்செருகல் – நூலாசிரியர் தவிர்ந்த மற்றொருவரால் எழுதிப் புகுத்தப்பட்டது.
இரவுக்குறி – களவுப் புணர்ச்சியில் இரவு நேரத்தில் சந்திக்க நியமிக்கும் இடம்.
இராக்கதம் – பெண்ணும் சுற்றுமும் உடன்படாமல் வலிந்து கொள்ளும் மணம்
இலக்கணப்போலி – இலக்கணம் இல்லாததாயினும் இலக்கணமுடையதாக தொன்றுதொட்டு சான்றோரால் வழங்கப்படுவது.
ஈடு – வட்டிக்குப் பணம் பெறுவோன், அப்பணத்திற்குப் பொறுப்பாக கொடுக்கும் நிலம், பொருள் ஆகியவை.
ஈமக்கிரியை – ஒருவர் இறந்ததன் பின்னர் செய்யப்படுகின்ற சமயச் சடங்குகள்.
ஈமம் – பிணங்களை தகனஞ் செய்யும் இடம்
உடன் போக்கு – தலைவி தலைவனுடன் செல்லல்.
உடன்கட்டை ஏறல் – கணவனை தகனம் செய்யும் போது துக்கம் தாங்காமல் மனைவியும் அத் தீயில் விழுந்து எரிதல்.
உப்பங்கழி – தரையை ஊடுறுத்துக் கடல் நீர் தேங்கி நிற்கும் இடம்.
உப்பளம் – உப்பு விளைவிக்கப்படும் இடம்
உயர்வு நவிற்சி – ஒரு பொருளை அல்லது விடயத்தை கேட்போர் விரும்பும் வகையில் உயர்த்திக் கூறுவது.
உயில் – ஒருவர் இறந்த பின்னர், அவரின் சொத்துக்கள் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்பதனை எழுதி வைத்துள்ள சாதனம்.
உருவகம் – உவமானத்திற்கும் உவமேயத்திற்கும் வேறுபாடு இல்லை என்பதைக் காட்டும் அணி
உரைகல் – பொன்னை உரைத்து அதன் தரம் அறிய உபயோகிக்கப்படும் ஒரு வகைக்கல்
உலோகாயுதன் – உலகமும், உலக இன்பங்களும் மாத்திரமே மெய் என்றும் கடவுளோ மறுமையோ இல்;லை என்று வாதிப்பவன்.
உலோபி – தானும் அனுபவிக்காது பிறருக்கும் கொடுக்காதவன்.
உவமானம் – ஒருபொருளுக்கு ஒப்பாக எடுத்துச் சொல்லப்படும் மற்றொரு சொல்.
உவமை – ஒரு பொருளுக்கு ஒப்பாக காணப்படும் மற்றொரு பொருளை விளக்கம் அணி
உவமேயம் – உவமானத்தால் விளக்கப்படும் பொருள்.
உழவலன்பு – பல பிறவிகள் தோறும் தொடர்ந்து வரும் அன்பு
உழைச்செல்வன் – நோயாளிக்குப் பக்கத்தில் இருந்து மருந்து முதலியன கொடுப்பவன்
உளறுதல் – அனைத்து இரகசியங்களையும் வெளிப்படையாகக் கூறுதல்.
ஊதாரி – வீண் செலவு செய்பவன்
ஊரடங்குச் சட்டம் – நாட்டில் ஏற்படும் அவசர நிலையின் காரணமாக மக்களை தங்கள் இடங்களைவிட்டு வெளியே செல்லக்கூடாதென அரசாங்கத்தால் விதிக்கப்படும் சட்டம்.
எதுகை – அடி தோறும் செய்யுட் சீர்களின் அல்லது வாக்கியத்தில் சொற்களின் இரண்டாவது ஒன்றிவரத் தொடுப்பது
எய்ப்பில் வைப்பு – முதமைக்காலத் தேவைகளுக்காக சேமித்து வைக்கப்படும் பொருள்.
எட்டிப்பரவு – வணிகத்தில் சிறந்தோருக்கு அரசன் கொடுத்த பூமி
ஏகபோகம் – தாமே எல்லாப் பொருளையும் அனுபவித்தல்
ஐங்குரவர் – அரசன், ஆசிரியன், தந்தை, தாய், தமையன்
ஐந்நிலம் – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
ஐம்புலன் – சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்துவகை உணர்வு
ஐம்பூதம் – நிலம், நீர், தீ, வளி, வான் எனும் ஐம்பொருள்
ஐம்பொறி – மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன
ஒட்டுண்ணி – தனக்கான உணவை வேறொரு பிராணியிடமோ, தாவத்திலோ இருந்து உறுஞ்சி வாழுவது
ஒத்திகை – மேடையேற்றும் முன் எந்த நிகழ்ச்சியையும் சரி பிழை பார்த்தல்.
ஒப்பாரி – ஒருவர் இறந்த பின் அவரின் உறவினர் (பெண்கள்) அவரை நினைத்து புலம்பி அழுதல்
ஒப்பரவு – உலக நடையறிந்து ஒழுகுதல்
ஒற்றர் – எதிரிகளின் இரகசியத் திட்டங்களை அறிந்து அரசுக்கு அறிவிப்பவன்.
ஒற்றி – சொத்தை அனுபவிக்கும் உரிமையுடன் கூடிய அடைமானம்
ஓடை – ஆறு முதலியவற்றிலிருந்து நீர் பாய்ந்து நிறைந்து நிற்கும் நீண்ட நீர்நிலை
ஓம்படை – ஒருவரை பேணிப்பாதுகாத்துத் தருமாறு இன்னொருவரிடம் ஒப்படைத்தல்
ஓய்வூதியம் – அரச சேவையிலிருந்து இளைப்பாறிய ஒருவருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் பணம்.
ஓலக்கம் – அரசனது சபா மண்டபத்திலே அமைச்சர், படைத்தலைவர், அறிஞர் முதலியோர் வீற்றிருக்கும் இடம்.
ஓவியன் – சித்திரங்களை வரைபவன்
கட்டாணை – ஒரு செயலை செய்யவும், செய்யாதிருக்கவும் நீதிமன்றத்தல் விதிக்கப்படும் கட்டளை
கட்டுக்கதை – ஆதாரமற்ற செய்திகளை கொண்டு சொல்லப்படும் கற்பனைக்கதை
கட்டுத்தறி – மிருகங்களை கட்டிவைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் தூண்
கணவாய் – நெருங்கிய மலைகளுக்கிடையில் காணப்படும் தாழ்ந்த நிலப்பகுதி.
கதவடைப்பு – தொழிலாளர்களின் எதிர்ப்பைத் முறியடிப்பதற்காக முதலாளிகள் மேற்கொள்ளும் நடவடிக்கை
கபடி – உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுபவன்
கப்பம் – சிற்றசுகள் பேரரசக்கு கொடுக்கப்படும் திறைப்பொருள்
கருத்தரங்கு– ஒரு பொருள் பற்றி பலரும் கருத்துத் தெரிவிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்படும் கூட்டம்.
கலங்கரை விளக்கம் – இரவில் மாலுமிகளுக்கு வழிகாட்டுவதற்காக கடற்கரையில் மிகஉயரமாக அமைக்கப்பட்ட விளக்கு தம்பம்.
கலைக்களஞ்சியம் – அறிவுத்துறைகள் அனைத்தையும் பற்றிய விடயங்களை திரட்டித்தரும் நூல்
கழிவிரக்கம் – நடந்து முடிந்த நிகழ்;ச்சி குறித்து துன்பப்பட்டுக் கொண்டிருத்தல்.
களஞ்சியசாலை – பொருள் பண்டங்களை சேகரித்து வைக்கும் இடம்.
கற்பகம் – விரும்பியதைக் கொடுக்கும் அற்புத மரம்
கன்னிக்கவிதை – ஒருவர், முதல் இயற்றிய பாடல்
கன்னிவேட்டை – அரசகுமாரன் காட்டிற்குச் சென்று முதன் முதல் நடாத்தும் வேட்டை
காசேடு – காசு சம்பந்தமான கொடுக்கல் வாங்கல்களை பதிவுசெய்து வைக்கும் புத்தகம்.
காசோலை – பணம் கொடுக்குமாறு வங்கிக்கு எழுத்து மூலம் கட்டளையிடும் ஒருவகைப் படிவம்.
காப்புறுதி – எதிர்பாராது நடக்கும் இழப்பு, இடர் ஆகியவற்றை ஈடு செய்வதற்காக செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம்.
காணிக்கை – கடவுளுக்கு அல்லது பெரியோருக்கு சமர்பிக்கப்படும் பொருள்.
காலமரணம் – முதிர்ந்த வயதில் ஏற்படும் மரணம்
கால்கோள்விழா – யாதேனும் ஒரு விடயத்தைத் தொடங்குவதற்கு மேற்கொள்ளும் விழா
காவற்காடு – அரண்மனையைச் சுற்றி அகழிக்கு வெளியே அரணாக அமைந்த காடு.
குடிபுகுதல் – புதிய வீடொன்றுக்கு அமைத்து சமய சடங்குகளை நிறைவேற்றிய பின் நல்ல மூகூர்த்த நேரத்தில் செல்லுதல்.
குத்தகை – பயிர்ச் செய்கைகாக வருடம் தோறும் நிலச் சொந்தக்காரனுக்குக் கொடுக்கப்படுவது.
குருகுலவாசம் – மாணவர்கள் ஆசிரியருடன் தங்கியிருந்து கல்வி பயிலுதல்.
குழூஉக்குறி – ஒரு கூட்டத்தார் பிறர் அறியாத படி தம்முள் வழங்கி வரும் குறிப்பு மொழி
குற்றவாளி – குற்றம் செய்தவரென நீதிமன்றத்தினால் நிரூபிக்கப்பட்டவர்.
கூலிப்படை – ஒரு பகுதியனுருக்காக கூலி பெற்றுக்கொண்டு போரிடும் படை
கூழைப்படை – போர்களத்தில், பலவகைப்பட்ட படைவகுப்புகளில் இறுதியில் நிற்கும் படை
கேள்வு – கப்பலில், பொருளை ஏற்றிச் செல்வதற்கான கூலி
கையுறை – குரு, பெரியோர், குழந்தைகள் ஆகியோரைக் காணச் செல்வோர் கொண்டு செல்லும் உபகாரப் பொருள்.
கையூட்டு – ஒரு விடயத்தை எளிதில் நிறைவேற்றும் வகையில் அதனோடு தொடர்புடையவர்களுக்கு வழங்கப்படும் இலஞ்சப் பணம்.
சகபாடி – ஒரே பாடசாலையில் ஒன்றாகப் படித்தவன்.
சங்கமம் – ஆறு கடலோடு கலக்கமிடும்
சட்டமூலம் – பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அங்கே கொண்டுவரப்படும் சட்டத்தின் பூர்வாங்க நிலை
சதாப்தம் – நூறு ஆண்டுகள் கொண்ட காலப்பகுதி
சதாவதானி – ஒரே நேரத்தில் நூறு விடயங்களை அவதானிக்கும் ஆற்றல் உடையவன்.
சமூகம் – பொது நோக்கோடு, இணைந்து வாழும் மக்கட் கூட்டம்.
சயந்தி விழா – வருடந்தோறும் ஒருவர் பிறந்த நாளன்று எடுக்கப்படும் விழா
சன்மானம் – ஒரு கருமத்தை இயற்றியமைக்கு வேதனத்துக்குப் பதிலாக வழங்கப்படுவது.
சாசனவியல் – கல்லிலோ செப்பேடுகளிலோ எழுதப்பட்ட பழங்கால எழுத்துக்களை வாசிக்கவும், அவற்றின் பொருள்களை விளகங்கவும் ஏற்பட்ட கலை
சான்றோன் – அன்பு, நாண், ஒப்பரவு முதலிய நற்குணங்கள் அமையப் பெற்றவன்.
சிதை – பிரதத்தைச் சுடுவதற்கு அடுக்கிய விறகு
சிரஞ்சீவி – நெடுங்காலம் வாழ்பவன்
சிலேடை – ஒரு சொல்லையோ சொற்றொடரையோ இரு பொருள் அமையத் தொடுப்பது.
சிறுபட்டி – கட்டுக்கடங்காத இளைஞன்
சுடுகாடு – பிரதேசங்களைத் தகனஞ் செய்யுமிடம்
சுயம்பு – ஒருவராலும் படைக்கப்படாது தானே தோன்றியது.
சுற்றுநிருபம் – ஒரு திணைக்கள அதிகாரி, தன் கீழ்க் கடமை புரிபவர்களுக்கு காலத்துக்குக் காலம் நிருவாக அலுவல்கள் குறித்து அனுப்பும் பணிப்புரை
சுனை – மலைகளில் காணப்படும் நீர் நிலை
செங்கோண்மை – அரசனது நீதி தவறாத ஆட்சி
செய்குன்று – அரண்மனையில் செயற்கையாக அமைக்கப்படும் குன்று
செலாவணி – இரண்டு நாட்டு நாணயத்தை சமப்படுத்தும் முறையில் மேற்கொள்ளப்படும் பொருளாதார முறை
சேமலாப நிதி – ஊழியர்களின் பிற்கால நன்மைக்காக நிறுவனங்கள் ஒதுக்கிவைக்கும் பணம்.
சொத்து – பணம், பண்டம், நிலம் முதலிய உடைமைப் பொருள்.
ஞானி – உலகப்பற்றை விட்டுக் கடவுளை அடைய வேண்டுமென்ற தனி நோக்கோடு இருப்பவர்.
தசாப்தம் – பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் விழா
தசாதவதானி – ஒரே சமயத்தில் பத்து விடயங்களை அவதானிக்கும் ஆற்றல் உடையவன்
தபுதாரன் – மனைவியை இழந்தவன் (விதுரன்)
தலைமுறை – ஒருவர் பிறந்து மறையும் வரையுள்ள காலம்
தற்குறிப்பேற்றம் – இயற்கையாய் நிகழும் நிகழ்ச்சிகளுக்குப் புலவன் ஒரு காரணத்தைக் ஏற்றிக் கூறும் அணி
தற்சமம் – ஆரியத்திற்கும் தமிழுக்குமரிய பொது எழுத்துக்களோடு விகாரமின்றித் தமிழில் வழங்கும் வடசொல்.
தற்பவம் – ஆரியச் சிறப்பெழுத்துக்கள், தமிழ் எழுத்துக்களாக விகாரப்பட்டுத் தமிழில் வழங்கும் வடசொல்.
தன்மை நவிற்சி – உள்ளதை உள்ளவாறே அழகுடக் கூறும் அணி
திறைசேரி – அரசின் நிதி சம்பந்தமான விடயங்கள் செயற்படத்தப்படும் இடம்.
தீர்க்கத்தரிசி – எதிர்கால விடயங்களை அறியும் ஆற்றல் படைத்தவன்.
தூசிப்படை – போர்;க்களத்திலே அணிவகுப்பில் முதல் வரிசையிலே நிற்கும் படை
தேசபிமானி – தான் பிறந்த நாட்டை நேசிப்பவன்.
தேவராளன் – வேண்டும் போது தெய்வம் ஏறப்பெற்று ஆடுபவன்.
நங்கூரம் – கப்பல் முதலியவற்றை நிறுத்துவதற்குப் பயன்படுத்தும் இரும்பாலான, நுனிகளுடன் கூடிய ஒருவகைக் கருவி
நடுகல் – போரில் வீரமரணம் எய்திய பேர்வீரரின் பெயரையும் புகழையும் எழுதி நாட்டப்படுற் கல்
நன்செய் – நெல் விளையும் வயல்
நாத்திகன் – கடவுள் இல்லையென்ற கொள்கையுடையவன்.
நிகண்டு – சொற்களின் பொருளைத் திரட்டித்தரும் செய்யுள் வடிவில் அமைந்த நூல்
நிந்தகம் – அரசரும் செல்வந்தரும் தமக்குக்கீ;ழச் சேவை புரிவோர்க்கு வழங்கும் நிலம்.
நூதனசாலை – மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் புராதனப் பொருள்களைப் பாதுகாத்து வைக்கும் இடம்.
நூலகம் – வாசிப்பதற்காக நூல்களைத் தொகுத்து வைத்திருக்கும் இடம்.
நொதுமலர் – பகையுமின்றி நட்புமின்றி நடுநிலையில் நிற்கும் அயலோர்.
நொத்தாரிசு – நிலபுலம் சம்பந்தமான ஆவணங்களை எழுதுவதற்கு அரச அனுமதிபெற்ற உத்தியோகத்தர்.
பகற்கனவு – மனம் ஒருவழிப்படாது இன்பமான கற்பனை உலகை சஞ்சரிக்கும் நிலை.
பச்சாத்தாபம் – ஒருவன், தான் செய்தது பிழையென அறிந்து வருந்துதல்.
பணவீக்கம் – ஒரு நாட்டிலுள்ள பொருள்களின் பொதுவிலை தொடர்ச்சியாவும், படிப்படியாகவும் கணிசமான அளவு அதிகரித்துச் செல்;லும் நிலை.
பதிப்புரை – ஒரு நூலை அச்சிட்டு வெளியிடுவோர் அந்நூலைப்பற்றி எழுதும் முறை
பரிவேடம் – சூரிய சந்திரர்களைச் சுற்றித் தோன்றும் ஒளி வட்டம்.
பற்றுச் சீட்டு – பணத்தையோ பொருளையோ பெற்றுக் கொண்ட மையக் குறிக்கும் பத்திரம்.
பன்னசாலை – முகிவர்கள் வசிப்பதற்கு இலை, தழை, கொண்டு வேயப்பட்ட குடிசை
பிடியாணை – கட்டளை வழங்கப்பட்டும் நீதிமன்றத்துக்குச் சமுகமளிக்காதிருந்த ஒருவரை கைது செய்து வருமாறு நீதிபதி விடுக்கும் கட்டளை
பிரசாரம் – ஒரு விடயத்தைப் பலரும் அறியுமாறு பரப்புதல்
பிரிதிநிதி – ஒரு குழவினருக்குப் பதிலாகக் கருமமாற்றுவதற்கு நியமிக்கப்படும் ஆள் அல்லது தெரிவு செய்யப்படும் ஆள்.
புறங்காட்டல் – போரிலே தோற்றுப் பின்வாங்கி ஓடதல்.
புறஞ்சேரி – நகருக்கு வெளியே மக்கள் வாழுமிடம்
பேரேடு – ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல்களிலும் ஏற்படும் வரவு
பொழிப்புரை – செய்யுளின் கருத்தை மாத்திரம் தொடுத்து எழுதும் உரை
பொன்விழா – ஐம்பது ஆண்டுகள் முடிவடையும் போது எடுக்கப்படும் விழா
பௌராணிகர் – புராணக் கதைகளைச் சுவைப்படச் சொல்லிப் பிரசங்கஞ் செய்பவர்.
மஞ்சரி – ஒரு தண்டிலே பல மலர்கள் மலர்ந்துள்ள பூங்கொத்து.
மலடி – மணம் புரிந்தும் பிள்ளையில்லாது இருப்பவள்.
மழலை – குழந்தையின் பொருள் விளங்காத மென்மொழி
மறுப்பாணை – ஒரு பிரேரணையையோ சட்டத்தையோ நிறைவேற்ற முடியாதவாறு தடைச்செய்து நிராகரிக்குஞ் சட்டம்.
மாலுமி – கப்பலைச் செலுத்துபவன்.
மானியம் – அரசர்கள் தமக்குக் கீழ் வாழ்வோர்க்குச் சன்மானமாக விடும் நிலம்.
முதலீடு – வாணிகம் முதலியன செய்வதற்கு இடும் மூலதனம்.
முத்துவிழா – எண்பது ஆண்டுகள் முடிவடையும் போது எடுக்கப்படும் விழா (அமுத விழா)
முற்றுகை – ஒரு நாட்டுக்கு வெளியிலிருந்து உணவு முதலிய எவ்வகைப் பொருளுங் கிடையாதவாறு தடுத்து, அந்நாட்டைப் படைகொண்டு நாற்புறமும் சூழ்ந்து நிற்றல்.
மெய்கீர்த்தி – செப்பேட்டிலோ கல்லிலோ செதுக்கப்படும் புகழ்மொழி
யூரிமார் – மேல்நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் போது நீதிபதிக்கு உதவும் முறையில் விசாரணையைக் கவனித்துத் தங்கள் தீர்ப்பைக் கூறும் எழுவரைக் கொண்ட ஒரு குழுவினர்.
வதந்தி – உண்மையை உறுதிப்படுத்தாமலே ஊர்மக்கள் பரப்பும் ஐயப்பாடான செய்தி
வர்த்தமானி – அரசினரது அறிவித்தல்களையும், விளம்பங்களையும் பிறவற்றையும் தாங்கி வெளிவரும் அரசாங்ப் பத்திரிகை
வள்ளல் – யாவருக்கும் வரையாது கொடுக்குந் தன்மை வாய்ந்தவன்.
வாகைசூடல் – ஒரு கருமத்தில் வெற்றிபெறுதல்.
வாக்காளர் – தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுடைவர்.
விகடகவி – நகையும் பரிகாசமும் பொருத்தக் கவி புனையும் ஆற்றல் படைத்தவன்.
விதவை – கணவனை இழந்தவள்
விளக்கமறியல் – குற்ற விசாரணைக்காக ஒருவரைப் பாதுகாப்பில் வைத்தல்.
வெள்ளிவிழா – இருபத்தைந்து ஆண்டுகள் முடிவடையும் போது எடுக்கப்படும் விழா
வெள்ளெழுத்து – எழுத்து விளக்கமாகத் தெரியாமைக்கு ஏதுவான பார்வைக்குறைபாடு.
வெள்ளைக்கவி – பொருளாழமும் சுவையுமில்லாத பாட்டு
வெள்ளையறிக்கை – தகவலின் பொருட்டு ஆட்சியாளர் பூர்வாங்கமாக வெளியிடும் அறிக்கை
வெள்ளோட்டோம் – புதிதாகச் செய்யப்பட்ட தேர், கப்பல் என்பவற்றை முதன்முதலாகச் செலுத்திப்பார்த்தல்.
வேட்பாளர் – தேர்தலொன்றில், தமது கொள்கைகளை விளக்கித் தம்மை ஆதரிக்கும் படி வாக்காளரை வேண்டிநிற்பவர்.
வேத்தியல் – அரசர், அழைச்சர் முதலிய உயர்வகுப்பினர் கண்டு களித்தற்காக ஆடப்படுங் கூத்து.
வைரவிழா (மணிவிழா) – அறுபது ஆண்டுகள் முடிவடையும் போது எடுக்கப்படும் விழா

FOUNDER DIRECTOR

Agaram Dhines

About Me

Name: Th. Dineshkumar (Agaram Dhines)
Profession: Tamil Language Teacher | YouTuber | Online Tutor

I am a passionate and experienced Tamil language and literature teacher with over 8 years of teaching experience. I currently serve as a Sri Lanka Teacher Service (SLTS II/2) educator, guiding students from Grades 6 to 13.

Academic Qualifications:

  • Bachelor of Arts (Hons) in Tamil & Tamil Language Teaching
  • Diploma in Artificial Intelligence and Graphic Designing

Professional Highlights:

  • I run a popular educational YouTube channel named “Agaram Dhines”, where I create and share free Tamil lessons.
  • I teach students not only from Sri Lanka, but also Tamil language enthusiasts from around the world.
  • I offer personalized online classes, supporting both school curriculum and Tamil language skill development.

My Services Include:

  • Curriculum-based teaching for Grades 6 to 13
  • Special focus on literature, grammar, and writing skills
  • Model exams, practice question papers, and video-based lessons
  • Speaking and writing skill development for non-native Tamil learners

Share: 

No comments yet! You be the first to comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *