Homeஆக்கத்திறன் விருத்திபந்தி அமைப்பு (கட்டுரையின் அடித்தளம்)

பந்தி அமைப்பு (கட்டுரையின் அடித்தளம்)

✍️ பந்தி அமைத்தல் (Paragraph Construction)

யாதாயினும் ஒரு விடயத்தை விளக்கியும் விரித்தும் ஒழுங்கு முறையில் எழுதுவதற்குரிய அமைப்பே பந்தியாகும். ஒரு விடயத்தை அடிப்படையாகக் கொண்டு முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியதாக இது அமையும்.

🏗️ பந்தியின் உள்ளடக்கங்கள்

  • ஒருமைப்பாடு: பந்தியின் உயிர்நாடி. ஒவ்வொரு பந்தியும் ஒரு தனித்துவமான கருத்தமைவைக் குறிக்க வேண்டும்.
  • அலகு வாக்கியம்: பந்தியின் அடிப்பொருளை உணர்த்தும் முதல் வாக்கியம். ஏனையவை இதை விளக்கும்.
  • துணைவாக்கியங்கள்: அலகு வாக்கியத்தை விபரிக்கும் 3 அல்லது 4 வாக்கியங்கள்.
  • தர்க்க ஒழுங்கு: செய்திகளை காரண காரியத் தொடர்புடையதாக ஒழுங்கு நிரலில் கூறுதல்.
  • நன்முடிப்பு: கருத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் நிறைவு வாக்கியம்.

🚫 தவிர்க்கப்பட வேண்டியவை

கூறியது கூறல் அதிகப்படியாக எழுதுதல் முரண்பாடான கருத்து பொருத்தமற்ற விடயங்கள் தெளிவற்ற நடை

🛤️ பந்தி எழுதும் படிமுறை

1. குறிப்புகளை எழுதுதல்
2. ஒழுங்குபடுத்தல்
3. வாக்கியங்களை இணைத்தல்
4. பந்தியை அமைத்தல்

📖 மாதிரிப் பந்திகள் (6 உதாரணங்கள்)

01. தமிழ் கவிதை இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதைக்கு வசந்த காலம். இந்தக் காலத்தில் வடிவத்திலும் வண்ணத்திலும் புதிய கவிதைப் பூக்கள் மலர்ந்தன. பாரதியின் குரல் இந்த வசந்தத்தைப் பாடும் குயிலாக ஒலித்தது. புலவர்களின் யாப்புப் பெட்டிக்குள் சிறைப்பட்டுக் கிடந்த கவிதையை அவன் மக்களின் பொதுவுடைமை ஆக்கினான்.
02. மரபுத்தொடர் சொற்களுக்குரிய நேர்ப்பொருளை உணர்த்தாது ஆற்றாலால் ஒரு குறித்த பொருளில் வரும் தொடர் மரபுத்தொடர் ஆகும். இவை கருத்துக்களைச் சுருக்கமாகவும் சுவையாகவும் கூற உதவுகின்றன. பேச்சுவழக்கிலும் உரைநடை, செய்யுள் ஆகியவற்றிலும் இவை பெரிதும் வழங்கி வருகின்றன.
03. வானியல் ஆராய்ச்சி வானியல் ஆராய்ச்சிகள் இன்று விஞ்ஞானச் சாதனைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சிகளாக விளங்குகின்றன. சந்திர மண்டலத்தினை கண்டு தெளிந்த விஞ்ஞானிகள், செவ்வாயில் காலடிப்பதிக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். விஞ்ஞான ஆய்வுகள் இன்று வியக்கத்தக்க வகையில் வளர்ந்துள்ளன.
04. கல்வியின் அவசியம் கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கையை ஒளிர்விக்கும் அணையா விளக்கு போன்றது. இது ஒருவனுக்கு அறிவையும், நற்பண்புகளையும் ஒருசேர வழங்குகின்றது. பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு அடையவும், ஒரு சிறந்த குடிமகனாக வாழவும் கல்வி வழிகாட்டுகிறது.
05. மரம் வளர்ப்பு மனித குலத்தின் உயிர்வாழ்க்கைக்கு மரங்கள் இன்றியமையாத இயற்கை வரப்பிரசாதங்களாகும். மரங்கள் நமக்குத் தேவையான தூய ஆக்சிஜனை வழங்குவதுடன், நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்கின்றன. இத்தகைய நன்மைகளைத் தரும் மரங்களை நாம் அனைவரும் போற்றி வளர்க்க வேண்டும்.
06. நூலகம் ஒரு நாட்டின் அறிவுக் களஞ்சியமாக நூலகங்கள் திகழ்கின்றன. வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதன் மூலம் ஒருவரின் சிந்தனை ஆற்றலை நூலகங்கள் விரிவுபடுத்துகின்றன. நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவிட நூலகம் சிறந்த இடமாகும்.
📖 பந்தி அமைத்தல் - மாதிரி உதாரணங்கள்
01 தமிழ் கவிதை வசந்தம்
இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதைக்கு வசந்த காலம். இந்தக் காலத்தில் வடிவத்திலும் வண்ணத்திலும், வாசத்திலும் வகை வகையான புதிய கவிதைப் பூக்கள் தமிழில் மலர்ந்தன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்த வசந்தத்தைப் பாடும் குயிலாகப் பாரதியின் குரல் ஒலித்தது. அவனே இந்த வசந்தத்தின் முதல் பூப்பாகவும், அதைப்பாடியே முதல் குயிலாகவும் இருந்தான். அரசர்களின் அந்தப்புரங்களில் ஆடிக் கொண்டிருந்த கவிதையை அவன் தான் சமூகத்தின் சேவகியாக்கினான். புலவர்களின் யாப்புப் பெட்டிக்குள் சிறைப்பட்டுக்கிடந்த கவிதையை அவன்தான் மக்களின் பொதுவுடைமை ஆக்கினான்.
02 மரபுத்தொடரின் சிறப்பு
சொற்களுக்குரிய நேர்ப்பொருளை உணர்த்தாது அச்சொற்களின் ஆற்றாலால் ஒரு குறித்த பொருளில் வரும் தொடர் மரபுத்தொடர் எனப்பெயர் பெறும். இதனைச் சுருக்கமாகவும் சுவையாகவும் கூறுவதில் மரபுத்தொடர்கள் பெரிதும் உதவுகின்றன. பேச்சுவழக்கிலும் உரைநடை, செய்யுள் ஆகியவைகளிலும் மரபுத்தொடர்கள் பெரிதும் வழங்கி வருகின்றன. பிறரின் கருத்துக்களைச் செவ்வனே அறிந்து கொள்ளவும் தம் கருத்தைச் செவ்வனே பிறருக்குக் கூறவும் வேண்டுமாயின் மரபுத்தொடர்களின் பொருளையும் பிரயோகங்களையும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.
03 நவீன வானியல் ஆராய்ச்சி
வானியல் ஆராய்ச்சிகள் விஞ்ஞானச் சாதனைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சிகளாக இன்று விளங்குகின்றன. சந்திர மண்டலத்தினை கண்டு தெளிந்த விஞ்ஞானிகள், செவ்வாயில் காலடிப்பதிக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். சூரியனிலிருந்து துண்டுகள் ஏதாவது வெடித்து விழுந்தால் அத்துண்டுகள் பூமியைத் தாக்கத்திருப்பதற்காக பூமியையே புரட்டி நகர்த்தும் அளவிற்கு விஞ்ஞான ஆய்வுகள் வளர்ந்து விட்டதைக் கண்டு அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.
📌 பந்தி 04: கல்வியின் அவசியம்
(அலகு வாக்கியம்): கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கையை ஒளிர்விக்கும் அணையா விளக்கு போன்றது.
(துணை வாக்கியங்கள்): இது ஒருவனுக்கு அறிவையும், நற்பண்புகளையும் ஒருசேர வழங்குகின்றது. கல்வியறிவு பெற்ற ஒருவரால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு அடையவும் வழிகாட்டுகிறது.
(நன்முடிப்பு): எனவே, "கேடில் விழுச்செல்வம் கல்வி" என்பதற்கேற்ப நாம் இளமையிலேயே கல்வியைக் கற்று சிறப்படைய வேண்டும்.
📌 பந்தி 05: மரம் வளர்ப்பு
(அலகு வாக்கியம்): மனித குலத்தின் உயிர்வாழ்க்கைக்கு மரங்கள் இன்றியமையாத இயற்கை வரப்பிரசாதங்களாகும்.
(துணை வாக்கியங்கள்): மரங்கள் நமக்குத் தேவையான தூய ஆக்சிஜனை வழங்குவதுடன், மண்ணரிப்பைத் தடுத்து நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்கின்றன. பறவைகள் மற்றும் சிறு விலங்குகளுக்கு இவை புகலிடமாகவும் அமைகின்றன.
(நன்முடிப்பு): இத்தகைய நன்மைகளைத் தரும் மரங்களை நாம் அனைவரும் போற்றி வளர்க்க வேண்டும்.

🧩 சரியான வரிசையைத் தெரிவு செய்!

தலைப்பு: உடற்பயிற்சி (அலகு வாக்கியத்தை முதலில் 'Tick' செய்க)

சரியான வரிசை: முதலாவது C (அலகு வாக்கியம்), அடுத்து A (துணை வாக்கியம்), இறுதியாக B (நன்முடிப்பு).

🔍 கள்ள வாக்கியத்தைக் கண்டுபிடி!

தலைப்பு: கல்வி (சம்பந்தமில்லாததை 'Tick' செய்க)

சரியான விடை: "காகம் கருப்பு நிறத்தில் இருக்கும்" என்பதே தவறானது. கல்விக்கும் இதற்கும் தொடர்பில்லை!

🎓 பந்தி அமைத்தல்: 10 பயிற்சிகள்

சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்து விடையைச் சரிபார்க்கவும்.

01. மரம் வளர்ப்பு
கீழே உள்ளவற்றில் "அலகு வாக்கியத்தைத்" (தலைப்பு வாக்கியம்) தெரிவு செய்க:
விடை: "மனித வாழ்விற்கு மரங்கள் இன்றியமையாதவை" (இதுவே பந்தியின் மையக்கரு).
02. கள்ள வாக்கியம் கண்டுபிடித்தல்
நூலகம் பற்றிய பந்தியில் சம்பந்தமில்லாத வாக்கியத்தைத் தெரிவு செய்க:
விடை: "வானில் மேகங்கள் கருப்பாக உள்ளன" (இது நூலகத்திற்குத் தொடர்பில்லாதது).
03. வரிசைப்படுத்துதல்
சரியான வரிசை எது?
விடை: B (முதலில் தலைப்பு, பின் விளக்கம், இறுதியில் முடிவு).
04 - 10 பயிற்சிகள் (வினாக்கள்)

4. கல்வி: ஒருமைப்பாடு என்பது பந்தியின் உயிர்நாடி - (சரி/தவறு?)

5. சேமிப்பு: "உண்டியல்" பற்றிய பந்தியில் "விமானம்" பற்றி எழுதலாமா? - (ஆம்/இல்லை?)

6. காலம்: "காலம் பொன் போன்றது" என்பது எவ்வகை வாக்கியம்? - (அலகு வாக்கியம்/துணைவாக்கியம்?)

7. சுற்றுப்புறம்: குப்பைகளை எங்கு வீச வேண்டும்? - (தெருவில்/தொட்டியில்?)

8. விவசாயம்: உழவர் என்பார் யார்? - (பயிர் செய்பவர்/வணிகம் செய்பவர்?)

9. தாய்மொழி: தமிழ் மொழி எத்தகையது? - (புதியது/தொன்மையானது?)

10. ஒழுக்கம்: சிறந்த பந்தியில் தவிர்க்க வேண்டியது எது? - (தெளிவு/கூறியது கூறல்?)

🧩 பந்தியை ஒழுங்குபடுத்து (Order the Paragraph)

வாக்கியங்களைச் சரியான வரிசையில் (1, 2, 3) அடுக்கி முறையான பந்தியை உருவாக்குக.

தலைப்பு: நூலகம்
அங்கு அமைதியாக இருந்து புத்தகங்களை வாசிப்பது சிறந்த பண்பாகும்.
ஒரு நாட்டின் அறிவுக் களஞ்சியமாக நூலகங்கள் விளங்குகின்றன.
ஆகவே, நூலகத்தைப் பயன்படுத்தி நமது பொது அறிவை வளர்த்துக் கொள்வோம்.

✅ முறையாக அமைக்கப்பட்ட பந்தி:

🌳 சவால் 01: மரம் வளர்ப்பு

வாக்கியங்களைச் சரியாக வரிசைப்படுத்துக (1, 2, 3)

ஆகவே, "மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்" என்பதற்கேற்ப மரங்களை நட்டுப் பாதுகாப்போம்.
மனித குலத்தின் உயிர்வாழ்க்கைக்கு மரங்கள் இயற்கையளித்த ஒரு வரப்பிரசாதமாகும்.
அவை தூய காற்றை வழங்குவதுடன், மண்ணரிப்பைத் தடுத்துச் சூழலைப் பாதுகாக்கின்றன.

✅ சரியான பந்தி:

📚 சவால் 02: கல்வியின் சிறப்பு

வாக்கியங்களைச் சரியாக வரிசைப்படுத்துக (1, 2, 3)

கல்வி ஒருவனுக்கு அறிவையும் நல்லொழுக்கத்தையும் வழங்கிச் சமூகத்தில் சிறந்த இடத்தைப் பெற்றுத் தருகிறது.
ஒரு மனிதனின் வாழ்வை அறியாமையிலிருந்து ஒளிமயமான எதிர்காலத்திற்கு இட்டுச் செல்வது கல்வியாகும்.
எனவே, "இளமையிற் கல்வி சிலையிற் எழுத்து" என்ற முதுமொழிக்கேற்ப நாம் கல்வியைக் கற்றுச் சிறப்படைவோம்.

✅ சரியான பந்தி:

🚀 பந்தி அமைப்பு: 5 விளையாட்டுக்கள் (சரி செய்யப்பட்டது)

1. சரியான வாக்கியத்தால் நிரப்பு

பந்தி: "ஆரோக்கியமான வாழ்விற்குச் சத்தான உணவு அவசியம். __________. எனவே சத்தான உணவுகளை உண்போம்."


2. தொடர்பில்லாத வாக்கியத்தைக் கண்டுபிடி

விவசாயம் பற்றிய பந்தியில் தேவையற்ற வாக்கியம் எது?



உன் தெரிவு: ...

3. சரியான துணை வாக்கியத்தை இணை

அலகு வாக்கியம்: "கல்வி ஒரு அழியாத செல்வம்."

உன் தெரிவு: ...

Share: 

No comments yet! You be the first to comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *