தொடர்கள் ஐந்து வகைப்படும்
- இரட்டைக்கிளவி
- இணைமொழி
- அடுக்குத்தொடர்
- அடுக்கிடுக்குத்தொடர்
- உவமைத்தொடர்
01) இரட்டைக்கிளவி
ஒரு சொல் தொடர்ந்து இரண்டு முறை வரும். ஆனால் இதனை தனித்தனியே பிரித்தால் பொருள் தராது. இவ்விரட்டைக்கிளவிகள் வினைச் சொற்களுக்கு அடைமொழியாய் குறிப்புப் பொருள் உணர்த்தி வரும்.
உதாரணம்
கடகட – சத்தம்
கடுகடு – கோபம்
கணகண – சூடு
கதகத – வெப்பம்
கமகம – வாசனை
கலகல – சிரிப்பு
கறகற – தொந்தரவு
கிடுகிடு – அச்சம்
கிறுகிறு – சுற்றுதல்
கீச்சுக்கிPச்சு – ஒலிகுறிப்பு
குடுகுடு – நடத்தல்
குசுகுசு – இரகசியம் பேசுதல்
குபீர் குபீர் – குருதி பாய்தல்
குபுகுபு – புகை கிளம்புதல்;
குளுகுளு – குளிர்
கொழுகொழு – பருத்தல்
சதசத – ஈரம்
சரசர – சத்தம்
சலசல – நீர் சத்தம்
சொரசொர – கடினத் தன்மை
தகதக – மின்னுதல்
தடதட – தட்டுதல், அடித்தல்
தரதர – தரையில் உராய்ந்து இழுத்தல்
திக்குதிக்கு – அச்சம்
திடுதிடு – விரைவான ஓட்டம்
திருதிரு – அச்சம்
துடிதுடி – வலியால் அவதியுறல்
துருதுரு – சுறுசுறுப்பு
தொணதொண – இடைவிடாது பேசல்
தொளதொள – இறுக்கமின்மை
நறநற – பல்லைக் கடித்தல்
நெருநெரு – உறுத்துதல்
நொளுநொளு – குழைவு
படபட – இதயத்துடிப்பு
பரபர – அவசரம்
பளபள – மின்னுதல்
பளார பளார் – கன்னத்தில் அறைதல்
பளிச்பளிச் – மின்னுதல்
பிசுபிசு – குழைவு
பொல பொல – கண்ணீர் வடிதல்
பொலு பொலு – உதிர்தல்
மட மட – வேகமாக குடித்தல்
மளமள – முறிதல், வேகமாக செயற்படல்
மெதுமெது – மென்மை
மாங்குமாங்கு – வேலை செய்தல், அடித்தல்
மொறுமொறு – காய்தல்
லபக்லபக் – விழுங்குதல்
லபோலபோ – கத்துதல்
வழவழ – உறுதியின்மை
வளவள – பயனின்றி பேசுதல்
விசுக் விசுக் – வேகமான நடை
விண்வி;ண் – விட்டு விட்டு வலித்தல்
விறு விறு – வேகமாக நடத்தல்
வெடுவெடு – கோபமான பேச்சு
வெதுவெ1து – இளஞ்சூடு
02 இணைமொழிகள்
- ஒரு கருத்தை தெளிவுபடுத்த இரு வேறுபட்ட சொற்கள் ஒன்று சேர்ந்து வருதலே இணைமொழி எனப்படும்.
- இரு சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒரு கருத்தை வலியுறித்தினால் அது இணைமொழி எனப்படும்.
இணைமொழிகளின் பண்புகள் - இவை ஒரு பொருள் குறித்தனவாயும் எதிர்ப்பொருள் உணர்த்துவனவாயும் பெரும்பாலும் அமையும். அதேபோல் ஒன்று மட்டும் பொருளுடையதாக அமைந்து ஒத்த ஓசை தரும் இணைமொழிகளும் காணப்படுகின்றன.
- ஓசை நயம் மிக்கனவாக அமையும்.
இணைமொழிகள் 3 வகைப்படும்- ஒத்த பொருள் குறித்த இணைமொழிகள்
01. அரை குறை – முழுமையற்ற
02. அருமை பெருமை – நல்ல குணம்
03. அன்பும் அருளும் – நன்றாக அனுபவித்தல்
04. அக்கம் பக்கம் – ஆராய்ந்து செயல்படல்
05. இன்னார் இனியார் – அன்பு செய்யும் நல்லவர்கள்
06. உற்றார் உறவினர் – சொந்தக்காரர்
07. ஏழை எளியவர் – மிகவும் வறியவர்கள்
08. கள்ளங்கபடம் – உயர்ந்து உள்ளத்தினர்,வெளிப்படையானவர்கள்
09. கண்ணுங்கருத்தும் – அவதானமாக இருத்தல
10. பட்டம் பதவி – கல்வியில் உயர்வடைதல்
11. சாக்குப்போக்கு – தட்டிக் கழித்தல் - எதிர்ப்பொருள் உடைய சொற்கள்
01. அல்லும் பகலும் – நாள் முழுவதும்
02. அங்கும் இங்கும் – எல்லா இடமும்
03. அடி முடி – ஆதியும் அந்தமும்
04. ஆதியும் அந்தமும் – தொடக்கமும் முடிவும்
05. இன்ப துன்பம் – சந்தோஷமும் துக்கமும்
06. உயர்வு தாழ்வு – முன்னேற்றமும் இறக்கமும்
07. எலும்பும் தோலும் – மிகவும் மெலிந்து
08. ஏற்ற இறக்கம் – முன்னேற்றமும் தாழ்வும்
09. கனவு நனவு – நினைவும் உண்மையும்
10. குன்றும் குழியும் – மேடும் பள்ளமுமாக - ஓசை நயம் மிக்க சொற்கள்
- அமளி துமளி 05. காரசாரம் 09. வீரதீரம்
- அந்திசந்தி 06. கோணல் மாணல்
- அகடவிகடம் 07. சாடைமாடை
- கண்ணீரும் கம்பலையும் 08. சூதுவாது
- ஒத்த பொருள் குறித்த இணைமொழிகள்
03) அடுக்குத்தொடர்
வாக்கியங்களில் பொருளைத் தெளிவுப்படுத்தவும் அழகுபடுத்தவும் உதவும் தொடர்களில் அடுக்குத்தொடரும் ஒன்றாகும். ஒரு சொல் அடுக்கி வந்து தனி தனி சொல்லாக பிரிந்தாலும் பொருள் உணர்த்துமாயின் அது அடுக்குத்தொடர் எனப்படும்.
அடுக்குத்தொடரின் பண்புகள்
• உவகை, வெகுளி, அச்சம், விரைவு, அவலம், அசைநிலை முதலான பொருள்களை உணர்த்தும்.
• ஒரே சொல் இரட்டித்து வந்து தனியே பிரிக்கும் போது பொருள் உணர்த்தக்கூடியது.
• அசை நிலைக்கு இரண்டு சொற்களாகவும் இசை நிலைக்கு இரண்டு, மூன்று, நான்கு சொற்கள் வரையும் அடுக்கி வரும்.
01. கதறிக் கதறி கூடிக் கூடி
03. கீழே கீழே குவியல் குவியல்
05. சுடச் சுட பிடி பிடி
07. பார்த்து பார்த்து புதிது புதிது
09. பாடி பாடி 10. பயந்து பயந்து
11. வாவா 12. போ போ
13. ஐயோ ஐயொ 14. பாட்டு பாட்டு
15. இதோ இதோ 16. அம்மா அம்மா
04) அடுக்கிடுக்குத் தொடர்
அடுக்குத் தொடரில் முதல் மொழி அல்லது சொல் விகாரம் அடைந்து வருவது அடுக்கிடுக்குத்தொடர் எனப்படும். பொருள் மிகுதிப்பாட்டை உணர்த்துவதற்காகவே அடுக்குத் தொடரின் முதல் சொல்லானது விகாரம் அடைந்து வரும்.
01. நெட்டை நெடிய – மிகவும் நீண்ட
02. தன்னந்தனி – மிகத் தனி
03. தத்தித்தாவி – தாவி தாவி
04. பச்சைப்பசேல் – மிகவும் பச்சை
05. பென்னம் பெரிய – மிகப்பெரிய
06. சின்னஞ் சிறிய – மிகச்சிறிய
07. கன்னங்கரிய – மிகக்கரிய
08. மும்மூன்று – மூன்று மூன்றாக
09. கூனிக்குறுகி – குறுகி குறுகி
10. நட்ட நடு – நடுச்சாமம்
11. நடுநடுங்கி – மிகவும் நடுங்கி
12. தௌ;ளத் தெளிந்து – மிகவும் தெளிந்து
13. வெள்ளை வெளேர் – மிகவும் வெண்மை
05) உவமைத்தொடர்
நன்கு தெரிந்த ஒருபொருளின் இயல்பை நினைவில் வைத்துக் கொண்டு தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது உவமையணி. அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடர் ஆகும். இவ்வுமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்கவும் உதவுகின்றன.
உதாரணம்
நகமும் சதையும் போல – ஒட்டி உறவாக இருத்தல்
மலரும் மணமும் போல – பிரியாமல் சேர்ந்திருத்தல்
ஒருதாய் வயிற்றுப் பிள்ளைப் போல – ஒற்றுமை
கடன்பட்டோர் நெஞ்சம் போல – மனம் கலக்கம் அடைதல்
இலைமறை காய் போல – ஆற்றல் வெளிப்படாது இருத்தல்
குன்றின் மேல் விளக்கு போல – எல்லோரினாலும் அறியப்பட்டத் திறமை
சித்திரப் பதுமை போல – அடக்கமாக இருத்தல்
தூண்டிலில் அகப்பட்ட மீன் போல – துன்பம் மிகுதியாக காணப்படல்
வைக்கோல் போர் நாய் போல – தானும் அனுபவியாது பிறரையும் தடுத்தல்
நுனிப்புல் மேய்வது போல – மேலோட்டமாகச் செய்தல்
குரங்கு கையில் பூமாலைப் போல – சேதமடைதல்
ஆழ்கடல் முத்து போல – பெறுமதி மிக்கது
மதில் மேற் பூனை போல – தீர்கமான முடிவெடுக்க முடியாதிருத்தல்
கொழு கொழும்பற்ற கோடி போல – ஆதாரமற்று நிற்றல்
சிவபூசையில் கரடி புகுந்தது போல – நன்மைக்கு இடையூறு

FOUNDER DIRECTOR
Agaram Dhines
About Me
Name: Th. Dineshkumar (Agaram Dhines)
Profession: Tamil Language Teacher | YouTuber | Online Tutor
I am a passionate and experienced Tamil language and literature teacher with over 8 years of teaching experience. I currently serve as a Sri Lanka Teacher Service (SLTS II/2) educator, guiding students from Grades 6 to 13.
Academic Qualifications:
- Bachelor of Arts (Hons) in Tamil & Tamil Language Teaching
- Diploma in Artificial Intelligence and Graphic Designing
Professional Highlights:
- I run a popular educational YouTube channel named “Agaram Dhines”, where I create and share free Tamil lessons.
- I teach students not only from Sri Lanka, but also Tamil language enthusiasts from around the world.
- I offer personalized online classes, supporting both school curriculum and Tamil language skill development.
My Services Include:
- Curriculum-based teaching for Grades 6 to 13
- Special focus on literature, grammar, and writing skills
- Model exams, practice question papers, and video-based lessons
- Speaking and writing skill development for non-native Tamil learners
