தம் எண்ணங்களைப் பிறருக்கு தெரிவிக்கும் ஊடகம் கடிதம் எனப்படும்.
உறவுமுறைக் கடிதத்தின் உறுப்புகள்
1
அனுப்புநர் முகவரி: கடிதம் எழுதுபவரின் முகவரி.
2
விளி (அழைப்பு): உறவுக்கேற்ற சொற்கள் (அன்புள்ள).
3
உடல்: நலம் விசாரித்தல் மற்றும் நோக்கம்.
4
முடிப்பு: உறவுக்கேற்ற இறுதிச் சொற்கள்.
5
ஒப்பம்: கையொப்பம்.
தொழில்முறைக் கடிதத்தின் உறுப்புகள்
வகைகள்: விண்ணப்பங்கள், புகார் கடிதங்கள், தகவல் வேண்டுதல், அழைப்பாணை, பிடியாணை, துறைசார்ந்த கடிதங்கள் போன்றவை.
1
அனுப்புநர் முகவரி: எழுதுபவரின் முகவரி.
2
பெறுநர் முகவரி: கடிதம் பெறுபவரின் முகவரி.
3
விளிப்பு: மரியாதையான விளித்தல் (ஐயா, அம்மணி).
4
தலைப்பு: தேவையைச் சுருக்கமாகக் கூறுதல்.
5
உடல்: காரணகாரிய விளக்கங்களுடன் கூறுதல்.
6
நன்றி: முடிவில் தெரிவிக்கப்படும் நன்றியுரை.
7
முடிப்பு: பணிவை வெளிப்படுத்தும் இறுதிச் சொற்கள்.
8
ஒப்பம்: கையொப்பம்.
தமிழ் இலக்கண வழிகாட்டி | 2026
அனுப்புநர் முகவரி (பெயர், இல, முகவரி)
திகதி (திகதி, மாதம், வருடம்)
பெறுநர் முகவரி (பதவி, நிறுவனம், இடம்)
விளிப்பு ஐயா! அம்மா! என மரியாதையாக அழைத்தல்
தலைப்பு (சுருக்கமாக விடயத்தைக் கூறுதல்)
உடல்
1) தலைப்பினை விபரித்து 1 அல்லது 2 வாக்கியங்கள்
2) மேலதிக விபரங்கள், உதாரணங்கள், பிரச்சினையின் தீவிரம்
3) நிறுவனத்திடம் எதிர்பார்க்கும் வேண்டுகோள்
நன்றி
முடிப்பு (இப்படிக்கு)
ஒப்பம்
சரியான இடங்களில் நிறுத்தக்குறிகள் இடப்படல் வேண்டும்
முகவரி & திகதி வலது பக்க ஓரத்தில் அமைதல் நலம்
விளிப்பு (அன்புள்ள அப்பா / நண்பா...)
[ உடல் பகுதி: நலம் விசாரித்தல் மற்றும் செய்திகளைப் பகிர்தல் ]
நன்றி
முடிப்பு (உன் அன்புள்ள)
ஒப்பம்
நோக்கம்: பாரம்பரிய கிராமியக் கலைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் கௌரவத்தை மேம்படுத்தக் கோருதல்.
அகரம் தினேஸ்,
செயலாளர், கிராம அபிவிருத்தி சங்கம்,
கண்டி.
செயலாளர், கிராம அபிவிருத்தி சங்கம்,
கண்டி.
2025.10.19
பிரதேச செயலாளர் அவர்கள்,
பிரதேச செயலகம்,
கண்டி.
பிரதேச செயலகம்,
கண்டி.
ஐயா / அம்மணி!
பொருள்: கலைஞர்களைப் பாதுகாப்போம் - வாழ்வாதார உதவி கோருதல் சார்பு.
மேற்படி விடயம் தொடர்பாக பல நூற்றாண்டு கால கலை பாரம்பரியம் கொண்ட எமது கிராமத்தின் கலைஞர்களின் வாழ்வாதாரம் தொடர்பானது. எமது கிராமத்தில் நாட்டுப்புறப் பாடல், கோலாட்டம், கும்மி, நடனம், உடுக்கு இசைக்கலைஞர், பறை வாத்தியக்காரர் என பல்துறை சார்ந்த கலைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது திரைப்பட மேலாதிக்கம், நவீன இலத்திரினியல் ஊடக வருகை மற்றும் நாட்டுப்புறக்கலை மீதான புறக்கணிப்பு காரணமாக எமது பாரம்பரிய கலைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் இக்கலைஞர்கள் உண்ண உணவின்றி, உறங்க இடமின்றி வறுமையில் வாடுகின்றனர். கலைஞர்களே நாட்டின் தூண்கள்; அவர்கள் தேசிய ஒருமைப்பாட்டையும் தேசப்பற்றையும் மக்களிடையே வளர்ப்பவர்கள். எனவே, இக்காவலர்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு வருமான வசதிகளை ஏற்படுத்தி, கலைப் பாரம்பரியத்தை வளர்க்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.
இடம்: கண்டி
இப்படிக்கு,
அகரம் தினேஸ்
கிராம அபிவிருத்திச் சங்கம்.
அகரம் தினேஸ்
கிராம அபிவிருத்திச் சங்கம்.
நோக்கம்: கிராம மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நூலக வசதியை ஏற்படுத்திக் கோருதல்.
அகரம் தினேஸ்,
தலைவர், இளைஞர் மன்றம்,
கண்டி மாவட்டம், கண்டி.
தலைவர், இளைஞர் மன்றம்,
கண்டி மாவட்டம், கண்டி.
30.05.2024
பிரதேச செயலாளர் அவர்கள்,
பிரதேச செயலகம்,
கண்டி.
பிரதேச செயலகம்,
கண்டி.
ஐயா / அம்மணி!
பொருள்: கிராமத்தில் நூலகம் ஒன்று அமைப்பது தொடர்பானது.
மேற்படி விடயம் தொடர்பாக இளைஞர் மன்றத் தலைவராகிய நான் அறியத் தருவது என்னவென்றால், எங்கள் கிராமத்தில் நூலக வசதியை மேம்படுத்த வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. போதிய நூலக வளங்கள் இல்லாததால், எமது கிராமத்து மாணவர்களுக்கு முக்கியமான கற்றல் வாய்ப்புகள் கிடைக்காமல் அவர்களின் கல்வி வளர்ச்சி பெரும் தடையாக உள்ளது.
மேம்படுத்தப்பட்ட நூலக வசதிகள் மூலம் மாணவர்கள் தங்கள் கல்வித் திறனை வளர்த்துக்கொள்வதோடு, சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் அது வழிவகுக்கும். இந்தப் பிரச்சினையைப் புறக்கணிப்பது கல்வி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். எனவே, எமது இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய எமது கிராமத்திற்கு ஒரு நூலகத்தை அமைத்துத் தருமாறு வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
இடம்: கண்டி
இப்படிக்கு,
அகரம் தினேஸ்
தலைவர், இளைஞர் மன்றம்.
அகரம் தினேஸ்
தலைவர், இளைஞர் மன்றம்.
